இவரதான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்....போட்டோ வெளியிட்ட நடிகை பூர்ணா....
தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. பார்ப்பதற்கு நடிகை அசின் போலவே இருப்பார். மலையாளத்தில்தான் இவர் அறிமுகமானார். முறையாக நடனம் பயின்றவர். 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் இயற்பெயர் ஷாம்னா காசிம்.
தமிழில் கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஷானித் ஆசிஃபலி என்பவரை அவர் மணக்கவுள்ளார். இவர் சவுதி அரேபியாவில் ஒரு பெரிய நிறுவனத்தில் சி.இ.ஓ-வாக பணிபுரிந்து வருகிறார். இவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ‘பெற்றோரின் ஆதரவுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திர்கு செல்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.