அவ வீட்டுக்கு வரக்கூடாது! என்ன தாய்க்குலம் இப்படி சொல்லிடுச்சு - பொங்கி எழும் பூர்ணிமாவின் அம்மா

by Rohini |   ( Updated:2023-12-16 10:41:23  )
poornima
X

poornima

Poornima Ravi: விஜய் டிவியில் 75 நாள்களைக் கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. முற்றிலும் வித்தியாசமான முறையில் ஆரம்பித்த இந்த சீசன் மக்கள் மத்தியில் வரவேற்பையும் கடுப்பையும் சமமான அளவில் பெற்று வந்தது.

நெட்டிசன்கள் கூட முதல் சீசனை பெஸ்ட் சீசன் என்றும் இந்த சீசனை வொர்ஸ்ட் சீசன் என்றும் விமர்சித்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த சீசன் மூலம் தான் கமலையும் சமூக வலைதளங்களில் அதிகளவில் வறுத்தெடுத்தார்கள்.

இதையும் படிங்க: 18 முறை ரஜினியுடன் மோதிய கார்த்திக்!.. ஜெயித்தது சூப்பர் ஸ்டாரா?.. நவரச நாயகனா?!…

அதற்கு ஒரு வகையில் காரணமாக இருந்தது பூர்ணிமாவும் மாயாவும்தான். புல்லி கேங்காக சுற்றி கொண்டிருந்த இந்த இருவரும் பேசும் முறை சில சமயங்களில் பார்க்கும் ரசிகர்களை கடுப்பேற்றியது. இப்படி சொன்னால் கமல் சார் கேட்டுப்பார். சாரி கேட்டால் எல்லாம் முடிந்து போகும் என்ற தைரியத்திலேயே பல வேலைகளை பார்த்தனர்.

இதனால் ரசிகர்கள் அவர்கள் இருவர் மீதும் கடுங்கோபத்தில் இருந்தார்கள். ஒரு கட்டத்தில் பூர்ணிமா இந்த வீட்டை விட்டு வெளியே போனால் நன்றாக இருக்கும் என்ற விமர்சனங்கள் எல்லாம் வந்தன. ஆனால் கடந்த வாரமாக பூர்ணிமாவின் செயல்களில் கொஞ்சம் மாற்றம் தெரிவதாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கமலுக்காக இயக்குனரையே மாற்றிய தயாரிப்பாளர்.. 5 வயசிலேயே அசத்திய உலக நாயகன்…

இந்த நிலையில் பூர்ணிமாவின் குடும்பத்தார் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்தனர். அதில் பூர்ணிமாவின் அம்மா பேசும் போது இடையில் பூர்ணிமாவை பற்றி பல நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தன. அப்போது இந்த நெகட்டிவ் கமெண்டோடு அவ வீட்டுக்கு வரக் கூடாது என நினைத்தேன்.

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் போகும் போது கூட முதலில் வேண்டாம் என்றுதான் தடுத்தேன். ஆனால் அவள் கேட்கவில்லை. அவள் அப்பாவும் அவளுக்கு சப்போர்ட்டாக இருந்து பேசியதால் அனுப்பி வைத்தேன். ஆனால் இப்பொழுது சரியாக விளையாடுகிறாள். பொறுத்திருந்து பார்ப்போம் என்று பூர்ணிமா அம்மா கூறினார்.

இதையும் படிங்க: நிவாரணம் கொடுக்க வந்த டிஆரின் கையைப் பிடிச்சு இழுத்த பெண்! பதறி போய் என்ன செய்தார் தெரியுமா?

Next Story