Connect with us
poornima

Biggboss Tamil 7

அது புல்லினா நீங்க பண்ணதும் புல்லிதான்! பிக்பாஸை வெளுத்து வாங்கிய பூர்ணிமா

Poornima Ravi:பிக்பாஸ் 80 நாள்களை கடந்து விறுவிறுப்பாக இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்று சரவண விக்ரம் எலிமினேஷன் ஆனதை தொடர்ந்து மீதமுள்ள போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.

ஆரம்பத்தில் இருந்தே தன்னை டைட்டில் வின்னர் சரவண விக்ரம் என்று கேமிரா முன் பதிவு செய்து கொண்டிருந்த விக்ரம் நேற்று அவரே எதிர்பாராத விதமாக எலிமினேட் ஆகியிருக்கிறார். இது அவருக்குத்தான் பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும்.

இதையும் படிங்க: விடாமுயற்சியும் இதானா? ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம்.. துணிவுக்கு பின்னர் அஜித் எடுத்த முடிவு…!

மேலும் மாயா சரவண விக்ரம் மீது கடும் கோபத்திலும் இருந்தார். அதை பல இடங்களில் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் நேற்று நடந்த ஒரு சம்பவம் குறித்து வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது சரவண விக்ரமை ‘காக்ரோச்’ என்று மாயாவும் பூர்ணிமாவும் சொன்னதை அடுத்து எதிர்ப்புகிளம்பியது.

இது குறித்து பூர்ணிமா லிவிங் ஏரியாவில் அனைவர் முன்னிலையிலும் பிக்பாஸிடம் பெரும் வாக்குவாதத்தில் இருந்தார்.அதாவது காக்ரோச் என சொன்னது அவர் அழுது கொண்டே இருக்கிறார் என நான் சொன்னது புல்லினா என் தலை மீது ‘தவளை’ பேண்ட் அணிய வைத்ததும் புல்லிதான்.

இதையும் படிங்க: 2023ல் டாப் 10 தமிழ்ப்படங்கள் – ரஜினியை ஓரங்கட்டிய சரத்குமார்

அதுவும் நீங்கள் ஏன்னை வற்புறுத்தி அதை அணிய வைத்தீர்கள். அனன்யா அதை எனக்கு கொடுத்தாலும் நீங்கள் வற்புறுத்தலின் பேரில்தான் அது என்னிடம் வந்தது. காக்ரோச் என விக்ரமை நான் சொன்னதுக்கு சாரி கேட்டுவிட்டேன்.

ஆரம்பத்தில் இருந்தே நான் வருத்தப்பட்டிருக்கும் போது என்னை கன்ஃபெஷன் அறைக்கு கூப்பிடுங்கள் என பலமுறை சொல்லியும் என்னை கூப்பிடவில்லை. இங்கு இருக்கும் மற்ற போட்டியாளர்களை விட நீங்கள் தான் எனக்கு பெரிய தடையாக இருக்கிறீர்கள் என பிக்பாஸை குறை கூறியிருக்கிறார் பூர்ணிமா.

இதையும் படிங்க: ப்ரதீப்புக்கு அடுத்த பலியாடு லோகேஷா?… உஷார் சாரே.. மாயாவின் அடுத்த ஸ்கெட்ச் இவருக்கு தான்..!

 

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top