எல்லா பழியையும் கமல் மேல் திருப்பிய பூர்ணிமா!.. அப்போ அப்படி பேசியதெல்லாம் பொய்யா கோபால்!..

by Saranya M |   ( Updated:2023-11-08 21:15:45  )
எல்லா பழியையும் கமல் மேல் திருப்பிய பூர்ணிமா!.. அப்போ அப்படி பேசியதெல்லாம் பொய்யா கோபால்!..
X

பிக் பாஸ் சீசன் 7 வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனியால் தனக்கு சேஃப் இல்லை என்றும் தன்னை போல மற்ற பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் பிக் பாஸ் என மைக்கில் அப்படி பேசிய பூர்ணிமா ரவி தற்போது பிளேட்டையே கமல் பக்கம் திருப்பியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடைசி வரை ரசிகர்கள் பார்க்காமலே போய் விடுவார்களோ என நினைத்து கவலைப்பட்ட நிலையில், அந்த டீமுக்கு யார் இப்படியொரு ஐடியாவை கொடுத்தார்கள் என தெரியவில்லை.

இதையும் படிங்க: பெட்ரூமில் அப்படியொரு போஸ்!.. தாறுமாறு பண்ணும் தங்கலான் நடிகை.. ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!..

ஆரம்பத்தில் கல்வி சர்ச்சையால் நீயா நானா விவாத மேடை வரை விவாதம் வெடித்த நிலையில், தற்போது அதை விட மோசமாக பெண்கள் கார்டு பயன்படுத்தி பிரதீப் ஆண்டனியை வெளியே அனுப்பி விட்டனர் என்கிற சர்ச்சை வெடித்துள்ளது.

கமல்ஹாசன் பெண்களின் சூழ்ச்சிக்கு பலியாகி விட்டாரா? அவரால் 24 மணி நேர ஷோவை பார்க்க முடியுமா? அந்த ஷோவின் இயக்குநர் கொடுத்த ஸ்க்ரிப்ட்டை பேசி வரும் கமல்ஹாசனை பலரும் பொதுவெளியில் கண்டபடி திட்டி வருகின்றனரே என ஏகப்பட்ட குரல்களும் கிளம்பி உள்ளன.

இதையும் படிங்க: எக்ஸ் பொண்டாட்டி எங்க ஓடினாலும் துரத்தி வரும் தனுஷ்!.. மாமனாருக்கும் வேட்டு வைக்கப் போறாரா?

மாயா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என சுச்சி லீக்ஸ் சுசித்ரா வெளிப்படையாக பேசிய பேட்டிகள் எல்லாம் வெளியாகி உள்ள நிலையில், பூர்ணிமா ரவியின் போலியான இரட்டை நாக்கும் அம்பலமாகி உள்ளது.

கூல் சுரேஷ் பஞ்சாயத்தை பேசத்தான் பூர்ணிமா கை தூக்கியதாகவும், கமல்ஹாசன் தான் அதை பெண்கள் பிரச்சனையாக மாற்றி ரெட் கார்டு கொடுத்து அனுப்பி விட்டார் என கடந்த ஒரு வாரமாக விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த வார இறுதியில் கமல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களுக்கு சாட்டையடியா அல்லது வழக்கம் போல சமாளித்துச் செல்வாரா என்பதை வேடிக்கைத்தான் பார்க்க வேண்டும்.

Next Story