அடுத்த பட இயக்குநருக்கு இப்பவே டார்ச்சர்!.. ஃபுல் சரக்கு போட்டு புலம்பித்தள்ளிட்டாராம்!..

தனக்குள் இருக்கும் இயக்குநரை எப்படியாவது கண்டுபிடித்து வெளியே எடுத்து விட வேண்டும் என அந்த பிரபல நடிகர் பல காலமாக போராடி வருகிறாராம். அதன் காரணமாகவே தனக்கு கதை சொல்லும் இயக்குநர்களின் கதையை மாற்றி அமைத்தும் சில சிடிக்களை கொடுத்து இதே போல நம்ம படம் வரணும் என்றும் கூறி அவதி படுத்தி வருகிறார் என்கின்றனர்.

ஏற்கனவே மற்ற நடிகர்களுக்கு வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர்கள் இவரது படங்களை இயக்கும் போது போதுமானதை விட அதிகமாகவே அசிங்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்லாம் இல்லை.. பாரதி கண்ணம்மா சீரியல் தான் லியோ.. இப்படி கவுத்துப்புட்டாரே லோகி!

நடிகர் நல்லா தான் நடிச்சிருக்காரு, இயக்குநர் தான் வேஸ்ட் என்கிற ஒரே டயலாக் தான் ரிப்பீட் ஆகி வருகிறது. இந்நிலையில், போட்டி நடிகருக்கு பெரிய ஹிட் கொடுத்த அந்த காமெடி இயக்குநர் உடன் அடுத்த படத்தில் பிரபல நடிகர் கைகோர்த்துள்ள நிலையில், இப்பவே அந்த இயக்குநருக்கு சில பல சிடிக்களை கொடுத்து டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துள்ளாராம்.

அவரே ஏற்கனவே பல சிடிக்களை பார்த்து ஒரு கதையை உருவாக்கி வைத்துள்ள நிலையில், அதில், எப்படி புதிதாக நடிகர் கொடுத்துள்ள சிடிக்களில் உள்ள சீன்களை சொருகுவது என புரியாமல் ஃபுல்லா சரக்கடித்து விட்டு தனது ஏடிக்களிடம் புலம்பி நீங்களே சீனை எங்கெல்லாம் சொருக முடியுமோ சொருவுங்கடா என பொறுப்பை அவர்கள் தலையில் கட்டி உள்ளாராம்.

இதையும் படிங்க: ஹாலிவுட் தரத்தில் விடாமுயற்சி!.. அடுத்த ஹைப்பை ஆரம்பிச்சிட்டானுங்க.. விவேகம் 2 மாதிரி வராமா இருந்தா சரி!..

ஏற்கனவே அந்த படம் காமெடி படமா? ஆக்‌ஷன் பிலிமா என்றே புரியாமல் இயக்குநர் இயக்கி வரும் நிலையில், இப்படியொரு வில்லங்கம் வேறா என தயாரிப்பாளர் தலையை பிய்த்துக் கொண்டுள்ளார் என்றும் கூறுகின்றனர்.

 

Related Articles

Next Story