கணவருக்கு எதிராக மகனை உருவாக்க திட்டம்.. வி நடிகரின் மனைவி கிளம்பி வந்ததே அதற்குத்தானாம்!

ஆரம்பர்த்தில் மற்ற நடிகைகளுடன் எல்லை மீறி நடித்தது உறவு வைத்துக் கொண்டதை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் இருந்து வந்த வி நடிகரின் மனைவி, தனது குழந்தைகள் தோளுக்கு மீறி வளர்ந்த நிலையிலும் தனது கணவர் இஷ்டத்துக்கு இளம் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து வருவதை கண்டு கடுப்பாகி தான் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் என பேச்சுக்கள் அடிபட்டன.
கணவரின் படத்துக்கு வராமல், இதுவரை எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த அந்த பிரபலம் திடீரென சி நடிகரின் படத்தை பார்க்க தியேட்டருக்கு புறப்பட்டு வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சமீபத்தில் கணவர் நடத்திய அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு கூட கிளம்பி வராத அவரின் மனைவி தற்போது இன்னொரு நடிகரின் படத்தை பார்க்க கிளம்பி வந்திருக்கிறாரே இதன் பின்னணியில் என்ன விவகாரம் உள்ளது என துலாவிய கோடம்பாக்க ஸ்பைகளுக்கு புதிதாக ஒரு அதிர்ச்சியான விஷயம் தெரிய வந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கணவருக்கு எதிராக
நடிகருக்கு எதிராக தனது மகனை சினிமாவில் ஹீரோவாக்க நடிகரின் மனைவி தற்போது தீவிர முயற்சியில் இறங்கி வருகிறாராம். பெரிய இயக்குநர்கள் மற்றும் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் உள்ளிட்டவர்களின் துணையுடன் தனியாக தனது மகனை ஹீரோவாக்கும் முயற்சியில் நடிகரின் மனைவி இறங்கி உள்ளதாக லீக்கான விஷயம் பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது.
மகனுக்கு வந்த ஒரு சில பட வாய்ப்புகளையும் அவரது அப்பா வேண்டாம் என ஒதுக்கி விட்டதாகவும், ஏற்கனவே தாய், தந்தையை பிரிந்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்ததெல்லாம் நடிகரின் மனைவியை ரொம்பவே பாதித்து விட்டதாக கூறுகின்றனர்.
மகனை உருவாக்கும் நடிகரின் மனைவி
நடிகரின் அந்த பேராசையும் மனைவிக்கு பிடிக்காத நிலையில், தான் அவரை விட்டு முற்றிலுமாக விலகி இருக்கிறார் என்றும் எப்படியாவது மகனை சினிமாவில் பெரிய ஆளாக ஆக்கி விட்டால், நடிகரின் துணையே தனக்குத் தேவைப்படாது என்கிற முடிவோடு பல திட்டங்களை செய்து வருகிறாராம் அந்த நடிகரின் மனைவி என்கின்றனர். இது எந்தளவுக்கு உண்மை, எந்த அளவுக்கு உருட்டு என்பது கூடிய சீக்கிரமே வி நடிகரின் ஆடியோ லாஞ்ச்சில் அவரது மனைவி பங்கு பெறாமல் இருந்தாலே தெரிந்து விடும் என்கின்றனர்.