போதும்டா இந்த சினிமா! என்னோடயே போகட்டும் - பிற துறைகளில் சாதித்த பிரபலங்களின் வாரிசுகள்

by Rohini |
senthil
X

senthil

Actor Senthil: இன்று கோலிவுட்டில் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளின் ஆதிக்கம்தான் இருந்து வருகின்றது. ஆனால் அந்தளவுக்கு அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. உதாரணமாக பிரபுவின் மகன், கார்த்திக் மகன் என உச்சம் தொட்ட நடிகர்களின் வாரிசுகளின் நிலைமை மோசமாகத்தான் இருக்கின்றது. இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் தங்கள் வாரிசுகளை பிற துறைகளில் ஈடுபடுத்தி வெற்றியும் கண்டிருக்கின்றனர். அதை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.

சின்னி ஜெயந்த்: 90களின் காலகட்டத்தில் நகைச்சுவையில் கலக்கி வந்தவர் சின்னி ஜெயந்த். பெரும்பாலும் முரளியின் படங்களில் இவரை பார்க்க முடியும். அவர் தன் மகனை நல்ல முறையில் படிக்க வைத்ததன் மூலம் இன்று அவருடைய மகன் திருப்பூர் சப் கலெக்டராக பணிபுரிந்து வருகிறாராம்.

இதையும் படிங்க: இரத்தம்.. வெட்டுக்குத்து.. கொலை!.. கிரிமினல்கள் கையில் சிக்கியிருக்கிறதா சினிமா?!..

நடிகர் செந்தில்: 80களில் சினிமாவை தன் கைக்குள் வைத்திருந்தவர் நடிகர் செந்தில். இன்றும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். ஏகப்பட்ட புகழுக்கு சொந்தக்காரரான செந்தில் தன் மகனை டாக்டருக்கு படிக்க வைத்து இன்று அவர் மகன் மணிகண்டன் ஒரு பல் டாக்டராக பணியாற்றி வருகிறாராம்.

மாதவன்: அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமான மாதவன் அறிமுகமான புதிதில் இளம் பெண்களின் மனதை கொள்ளைக் கொண்ட நடிகராக வலம் வந்தார். இவருடைய வாரிசு கண்டிப்பாக சினிமா பக்கம் எட்டிப்பார்க்கும் என்றிருந்த நிலையில் ஒரு நீச்சல் வீரராக உயர்ந்து நிற்கிறார். இதுவரை 5 கோல்ட், 2 சில்வர் என இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவில் உயர்ந்து நிற்கிறார்.

இதையும் படிங்க: மகளின் முதல் வாழ்க்கை விவகாரத்தில் முடிய பிரபு தான் காரணமா..? பயில்வான் வெளியிட்ட ஷாக் தகவல்.!

தலைவாசல் விஜய்: குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை தக்க வைத்தவர் நடிகர் தலைவாசல் விஜய். ஒரு சில படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். இவரும் தன் மகளை ஒரு நீச்சல் வீராங்கனையாக உருவாக்கியிருக்கிறார்.பல போட்டிகளில் பங்கேற்று ஏராளமான விருதுகளை தட்டிச் சென்றிருக்கிறாராம். இவர்கள் வரிசையில் அடுத்ததாக அஜித்தும் இருக்கிறார். அவர் தன் மகனை ஒரு கால்பந்தாட்ட வீரராக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

Next Story