இந்த மூஞ்சு நாகர்ஜூனாவா? நெப்போலியனுக்கு பல்ப் கொடுத்த பிரம்மாண்ட இயக்குனர்
கோலிவுட்டின் இயக்குனர் இமயம் பாரதிராஜா தன்னை பார்த்து நீயெல்லாம் நாகர்ஜூனா மாதிரியா இருக்க எனக் கலாய்த்ததாக நெப்போலியனை தெரிவித்து இருக்கிறார். புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர். இப்படத்தை பாரதிராஜா இயக்கி இருந்தார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். இதுவரை 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது குறித்து மனம் திறந்துள்ளார். அப்பேட்டியில், நான் கிராமத்தில் இருந்த பொழுது கட்சிப்பணி இருந்து வந்தேன். அப்போது 1986ம் ஆண்டு என்னுடைய மாமா கே.என்.நேரு ஊராட்சி புள்ளம்பாடி யூனியன் சார்மன் தேர்தலில் போட்டியிட்டார். 89ம் ஆண்டு லால்குடி தேர்தலிலும் போட்டியிட்டு அமைச்சரானார். அவருக்கு உதவியாக நம்பிக்கையான ஆள் தேவை வந்த சமயம் எனது அண்ணனின் சிபாரிசில் நான் அவருக்கு உதவியாளராக இருந்தேன். அங்கு எனக்கு மேனஜராக இருந்த ரங்கராஜனால் தான் சினிமா எனக்கு அறிமுகமானது. ஆண்பாவம் திரைப்படத்தின் தயாரிப்பாளராக இருந்தவர். ஒருமுறை என்னை படப்பிடிப்புக்கு அழைத்து சென்றார்.
அந்த நேரத்தில், என் நண்பர்களும் உதயம் என்ற படம் வெளியாகி இருக்கிறது. அதில் உன்னைப் போன்றே இருக்கும் ஒருவர் நடித்துள்ளார். ஏன் நீயும் நடிக்கலாமே எனக் கேட்டனர். நானும் படத்தை போய் பார்த்தேன். நாகார்ஜூனா படம் தான். அவரை பார்த்ததும் இவரும் என்னை மாதிரி தானே இருக்கிறார். நாமும் நடிக்கலாமே எனத் தோன்றியது. அப்போது மாமாவை பார்க்க துணை சபாநாயகர் துரைச்சாமி அடிக்கடி வருவார். அவரிடம் சார் நடிக்க ஆவலாக இருக்கேன். எதுவும் வாய்ப்பு இருந்தால் அமைத்து தாருங்கள் எனக் கேட்டேன். அவரும் பாரதிராஜா என் நெருங்கிய நண்பர். நான் உன்னை அவரிடம் கூட்டி செல்கிறேன் என்றார். அப்படி சொல்லி, இருவரும் மாற்றி மாற்றி வேலையில் பிஸியாகி விட்டார். இப்படியே ஒரு மாதம் சென்றுவிட்டது. நான் அவரிடம் நீங்க என்னை கூட்டிட்டு போக வேண்டும். நான் பார்க்க நேரம் மட்டும் வாங்கி தாருங்கள் எனக் கேட்டேன். அவர் போன் எல்லாம் வேண்டாம் எனக் கூறி ஒரு கடிதம் கொடுத்தார். அதில், நேருவின் மைத்துனர் உங்களை காண வருகிறார். 10 நிமிடம் பார்க்க நேரம் கொடுக்கவும் என எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு நானும் பாரதிராஜா அலுவலகம் சென்றேன். அங்கு கொடுத்துவிட்டு உடனே கூப்பிடுவார்கள் என நினைத்தேன். ஆனால் 1.5 மணி நேரத்திற்கு பின்னர் தான் அழைத்தனர். உள்ளே சென்றேன் கம்பீரமாக அமர்ந்திருந்தார். என்னை உட்கார வைத்துவிட்டு, என்ன நடிக்க அப்படி ஒரு ஆசை என கேட்டார்.
என்னை நாகார்ஜூனா மாதிரி இருப்பதாக நண்பர்கள் கூறினர். அதனால் தான் நடிக்க வேண்டும் எனக் கூறினேன். அதை கேட்டவர், ஏன்யா நீ ஜவஹர்லால் மாதிரி இருப்பதாக கூறினால், ஜவஹர்லால் ஆகிவிடுவாயா எனக் கேட்டார். நான் ஐய்யோ உளறிவிட்டோமோ என நினைத்தேன். உடனே சார் ஒரு வாய்ப்பு கொடுங்கள். நிரூபிப்பேன் எனக் கூறியதும், யோசித்துவிட்டு என்னை படப்பிடிப்புக்கு கூட்டி சென்றார். புது நெல்லு புது நாத்து படப்பிடிப்பு அது. அப்படத்தில் என் தோற்றத்தை எல்லாம் வைத்து வில்லனாக அறிமுகப்படுத்தினார். ஆனால் அம்பாசமுத்திரத்தில் 30 நாள் படப்பிடிப்புக்கு என்னை அழைத்து சென்றார். முதல் 25 நாள் நடிக்க சொல்லவே இல்லை. 26வது நாள் தான் என்னை கேமரா முன்னாடி நிற்க வைத்தார். ஆனால் 26 வயதான எனக்கு 60 வயது கிழவன் வேடம். அழுகையே வந்துவிட்டது. சரி வந்துவிட்டோம் ஒரு சீனாவது நடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு நடித்து கொடுத்தேன்.
படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இயக்குனர் என்னை கூப்பிட்டு உனக்கு பெயர் மாற்றலாம் எனக் கூறினார். உனக்கு பிடித்த பெயரை எழுதி எடுத்துவா என்றார். நானும் இரண்டு நாள் கஷ்டப்பட்டு பெயர்களை கொண்டு சென்றேன். அதில் இருந்த ஒரு பெயரை ஹீரோவுக்கு வைத்து விட்டார். எனக்கு தகுந்த பெயர் கிடைக்கவில்லை. நானே உனக்கு ஒரு பெயர் வைத்துக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டார். பட ரிலீஸுக்கு இரண்டு நாள் முன்னர் கால் செய்து உனக்கு நெப்போலியன் என பெயர் வைத்திருப்பதாக கூறினார். அய்யோ நண்பர்கள் கலாய்ப்பார்களே என யோசித்தேன். அவரே என்னப்பா பெயர் பிடிக்கலையா எனக் கேட்டார். இல்லை சார் ஓகே எனக் கூறிவிட்டு நண்பர்களிடம் இந்த பெயரை சொன்னேன். அவர்கள் கலாய்த்தனர். நானோ தமிழ் பெயரோ இந்தி பெயரோ வைத்தால் இங்கு தான் நடிக்க முடியும். நான் ஹாலிவுட் வரை செல்ல போகிறேன். அப்பொழுது பெயர் மாற்ற வேண்டாம் என நினைத்து தான் இந்த பெயர் எனக் கூறினேன். அப்பொழுது சமாளிக்க சொன்ன விஷயம், இப்பொழுது உண்மையிலேயே நடந்துவிட்டது. ஹாலிவுட்டிலும் நான் நான்கு படங்கள் நடித்து விட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.