Vidamuyarchi:விடாமுயற்சி டீசரில் இந்த கேரக்டரை கவனிச்சீங்களா? வேற லெவல் குக்கிங்கா இருக்கே
Vidamuyarchi: நேற்று இரவு 11 மணி அளவில் அஜித் நடித்த விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியானது. அனைவரும் பல நாட்களாக காத்துக் கொண்டிருந்த அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அப்டேட் நேற்று வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் திளைத்திருக்கிறது. எந்த ஒரு முன்னறிவிப்பு இன்றி எந்த ஒரு போஸ்டரும் இன்றி ஒரு பெரிய நடிகரின் பட அப்டேட் வருகிறது என்றால் அது அஜித்தின் படமாக தான் இருக்கும்.
அதற்கு தனியாக ஒரு தில் வேண்டும். அந்த தில் அஜித்திற்கு இருக்கிறது என நேற்று வெளியான டீசரிலிருந்து அனைவரும் பேச தொடங்கிவிட்டனர். ஏனெனில் விஜய், ரஜினி என சினிமாவில் பாப்புலராக இருக்கும் நடிகர்களின் படங்களின் அப்டேட் வெளியாகிறது என்றால் இரு தினங்களுக்கு முன்பாகவே அதைப்பற்றிய பரபரப்பு சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கும்.
ஆனால் அஜித் இது மாதிரி எதையும் விரும்ப மாட்டார். அப்படித்தான் இந்த விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது .ரசிகர்கள் எப்பவும் போல அந்த டீசரை டீ கோடிங் செய்ய ஆரம்பித்து விட்டனர் .படத்தில் அஜித்துடன் அர்ஜுன், ஆரவ் ,திரிஷா, ரெஜினா என முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். டீசரை பார்க்கும் பொழுதும் இவர்களைத் தவிர மற்ற எந்த ஒரு தெரிந்த முகங்களும் அந்த படத்தில் நமக்கு தெரியவில்லை.
அதுமட்டுமல்ல மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியாகும் இந்த படம் ஒரு கேங்ஸ்டர் திரில்லர் படமாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்ப டீசரும் அமைந்திருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் படம் உருவாகி இருப்பதாக இந்த டீசரே நமக்கு உணர்த்திவிட்டது. இதில் முக்கியமாக ஒரு கேரக்டரை அனைவரும் கவனிக்க மறந்து இருப்போம் .
அவர் வேறு யாரும் இல்லை. ஹென்றி போகர்ஸ். 1990 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு குறுந்தொடரில் பெரிய அளவில் பேசப்பட்ட கேரக்டர் தான் அது . பின்னாளில் இது 2017 ஆம் ஆண்டு இட் என்ற பெயரில் படமாக வெளியானது. அதில் ஒரு பெரிய சைக்கோ வில்லனாக நடித்திருக்கும் கேரக்டர் தான் இந்த ஹென்ரி போவர்ஸ்.
இவரின் போஸ்டரை இந்த படத்தில் இயக்குனர் பயன்படுத்தியிருப்பது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த இட் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். அதில் நடித்த ஒரு கேரக்டரை இந்த படத்தில் மகிழ்திருமேனி பயன்படுத்தி இருப்பது விடாமுயற்சி படத்தை பெரிய லெவெலில் உருவாக்கி இருக்கிறாரோ என ரசிகர்கள் ஒரே குஷியில் இருக்கிறார்கள்.