தனுஷ் படத்தையே நிராகரித்த பிரபல மியூசிக் டைரக்டர்... என்ன நடந்தது தெரியுமா?
Dhanush: தமிழ் சினிமாவின் மைய நீரோட்டத்தையே மாற்றக்கூடிய வல்லமை ஒரு சில படங்களுக்குத்தான் உண்டு. அப்படியான ஒரு படம்தான் தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவான புதுப்பேட்டை படம். அன்பே சிவம் படத்துக்கு ஏற்பட்ட நிலைதான் ரிலீஸானபோது புதுப்பேட்டைக்கும் ஏற்பட்டது.
தயாரிப்பாளர் கையைச் சுடவில்லை என்றாலும் ரிலீஸாகி 18 ஆண்டுகள் கழித்தும் இன்றும் அதை இசை, மேக்கிங், டயலாக், திரைக்கதை என பல விஷயங்களுக்காக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் படங்களுள் புதுப்பேட்டைக்கும் முக்கியமான இடமுண்டு.
இதையும் படிங்க: விஜய் படத்துக்கு அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை… வழக்கம்போல தெறிக்கவிடுமா?
லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்காக செல்வராகவன் முதலில் ஒருநாள் ஒரு கனவு என்கிற டைட்டிலில் ஒரு படத்தையே எடுக்க நினைத்தாராம். ஆனால், அந்தப் படம் பூஜை கூட போடப்படாமல் அப்படியே முடங்கியது. தனுஷ், சிநேகா, சோனியா அகர்வால், ஆர்கே சுரேஷ் என அந்தப் படத்தில் நடிகர்கள் நடிக்க இருந்தார்கள்.
படம் முடங்கிய நிலையில், வேறொரு திரைக்கதையைத் தயார் செய்து அதே தயாரிப்பாளர்களோடு இணைந்து பணியாற்ற முடிவு செய்தார் செல்வராகவன். அதுதான் புதுப்பேட்டை. 2005 மார்ச்சில் தொடங்கிய பணிகள் முடிந்து 2006 மே மாதத்தில் படம் வெளியானது. இந்தப் படத்தில்தான் முதல்முறையாக அதற்கு முன் பயன்படுத்தப்பட்டு வந்த சினிமாஸ்கோப் ஃபார்மேட்டை விட்டு சூப்பர் 35 எம்எம் ஃபார்மேட்டில் எடுத்திருந்தார்கள்.
பீட்சா படத்துக்கு முன் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் முக்கியமான ஒரு ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடங்கும்போது இசையமைப்பதற்காக ஹாரிஸ் ஜெயராஜையே செல்வராகவன் முதலில் அணுகினாராம். கதையை முழுமையாகக் கேட்டு முடித்த ஹாரிஸ், இது எனக்கு ஏற்ற படம் இல்லை என்று சொல்லி மென்மையாக மறுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: இது எப்ப நடந்துச்சி!.. பல வருடங்கள் கழித்து தனுஷுடன் சிவகார்த்திகேயன்!.. வைரல் போட்டோ!…
ஆனால், அது தவறு என்பது பின்னாளில் தெரிந்தது. ஆம், 2013-ம் ஆண்டு வெளியான இரண்டாம் உலகம் படத்துக்காக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் செல்வராகன் சென்றிருக்கிறார். அதன்பிறகே செல்வராகவனைப் புரிந்துகொண்ட ஹாரிஸ், அந்தப் படத்துக்கு சிறப்பான பாடல்களை அமைத்துக் கொடுத்தார்.