ஜமீன்கோட்டை ஹீரோ… இயக்குனர்.. இசையமைப்பாளர்… பன்முக கலைஞர் கலைப்புலி சேகரன் திடீர் மரணம்!

Kalaipuli Sekaran: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக இருந்த சேகரன் திடீர் உயிரிழப்பு சம்பவம் ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் திரைப்பட துறையில் பைனான்சியர் மற்றும் விநியோகிஸ்தராக அறிமுகமானவர் கலைப்புலி எஸ் சேகரன். இவர் ஒரு கட்டத்தில் எஸ் தாணு மற்றும் சூரியுடன் இணைந்து கலைப்புலி என்னும் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார்.
இந்த நிறுவனம் முதல்முறையாக யார் என்ற படத்தினை தயாரித்தார். அதே படத்தில் வில்லனாகவும் சேகரன் நடித்து இருந்தார். பின்னர் அவர் ஊரை தெரிஞ்சிக்கிட்டேன், காவல் பூனைகள், உளவாளி படத்தினை இயக்கி இருந்தார். எல்லா படங்களுமே சுமார் வெற்றி ரகமாக அமைந்தது.
பின்னர் அவரே எழுதி, இயக்கிய ஜமீன்கோட்டை படத்தில் ஹீரோவாக நடித்தார். அப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பல வருடம் கழிந்தும் இன்னும் ரசிகர்களிடம் வைரலாக பேசப்பட்டு வருகிறது. குடும்ப சங்கிலி படத்தில் முன்னணி வேடத்தில் நடித்தார்.
பின்னர் சேகரன் படம் விநியோகிஸ்தம் செய்வதில் பிஸியாகினார். 20களில் விநியோகிஸ்தர் அமைப்பின் தலைவராக மாறினார். 2008ம் ஆண்டு மாளவிகாவை வைத்து கட்டுவிரியன் படத்தினை இயக்கி இசையமைப்பும் செய்தார். இதன் பின்னர் வயது முதிர்வால் சினிமாவில் பெரிய அளவில் தலைக்காட்டவில்லை.
இந்நிலையில் ஏப்ரல் 13ம் தேதி மதியம் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 5 மணி முதல் வைக்கப்படவுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.