ஹிட் அடித்த ‘போர்த்தொழில்’ படமும் திருட்டு கதையா?!.. அட போங்கப்பா முடியல!..
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், விளம்பரம் இல்லாமல், புரமோஷன் கூட இல்லாமல், சத்தமில்லாமல் என இப்படி எதுவுமே இல்லாமல் சில படங்கள் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றுவிடும். அதற்கு காரணம் அந்த படத்தின் கதை மற்றும் இயக்குனர் அமைத்த திரைக்கதை மற்றும் காட்சிகளில் இருக்கும் சுவாரஸ்யம் ஆகியவைதான். சசிக்குமார் தயாரித்து, இயக்கி நடித்து வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படமும் அப்படித்தான் வெளியாகி வெற்றி பெற்றது.
அதேபோல், சரத்குமார், அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் போர்த்தொழில் படமும் இப்படித்தான் திடீரென வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாகவும் அமைந்தது. சரத்குமாருக்கு மீண்டும் ஒரு ரீ எண்ட்ரியாக இப்படம் அமைந்தது. விக்னேஷ் ராஜா என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார்.
இதையும் படிங்க: சித்தர்களை பார்த்து முழுவதுமாக மாறிவிட்ட சிம்பு – சந்தானம் சொன்ன அதிர்ச்சி தகவல்!..
இந்நிலையில், இந்த படத்தின் பிற்பகுதி அதாவது இரண்டாம் பாதி மற்றொரு இயக்குனரின் கதையிலிருந்து சுடப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ஒரு புதிய இயக்குனர் ஒரு தயாரிப்பாளரிடம் ஒரு கதையை சொல்லி சம்மதம் வாங்கியிருந்தார். ஆனால், இந்த படத்தை பார்த்த போது ‘ஐயோ இந்த படத்தின் இரண்டாம் பாதி அப்படியே நம்ம கதை போலவே இருக்கிறது’ என தலையில் கை வைத்து விட்டார்களாம்.
இது தொடர்பாக புகார் அளிப்போம் என அந்த தயாரிப்பாளர் சொன்னபோது ‘வேண்டாம் சார். புகார் கொடுத்தால் என்னை வைத்து படமெடுக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரமாட்டார்கள். இதற்கு முன்பு இதுபோல புகார் சொன்ன எந்த உதவி இயக்குனருக்கும் படம் கிடைத்ததே இல்லை. நான் கதையை மாற்றிவிடுகிறேன். இதை இப்படியே விட்டுவிடுங்கள்’ என சொல்லிவிட்டாராம்.
இந்த தகவலை பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அந்த இடத்துல ஒரு ஜிப்பு வைக்கணும்!.. இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் ராஷ்மிகா!..