Categories: latest news

Kanguva: கங்குவா படத்துல பாசிட்டிவ்ஸ் விட நெகடிவ்ஸ் அதிகமா இருக்கே?!… இப்படி சாய்ச்சு புட்டிங்களேப்பா!…

கங்குவா திரைப்படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்களை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். மேலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார்.

இதையும் படிங்க: Suriya:கங்குவா மட்டுமில்ல.. நவ.14ஆம் தேதி ரிலீஸான சூர்யாவின் மற்ற படங்கள் எதுஎதுனு தெரியுமா?

சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ், போஸ் வெங்கட், நட்டி நடராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் படம் இன்று வெளியாகி இருக்கின்றது.

நேற்று தொடங்கிய முன்பதிவிலேயே படம் 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. முதல் நாளிலேயே உலக அளவில் 100 முதல் 150 கோடி வரை வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கலவையான விமர்சனங்களை கூறி வருவதால் அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் குறையும் என்று கூறி வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் படத்திற்கு முன்பாக படக்குழுவினர் கொடுத்த பிரமோஷன்களில் படத்தை ஓவர் பில்டப் கொடுத்து பேசி இருந்தார்கள். ஆனால் அவர்கள் கொடுத்த பில்டப் படத்தில் இல்லை என்பது தான் உண்மை. இந்த திரைப்படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என்று ரசிகர்கள் கூறிய விஷயங்களை இதில் தெரிந்து கொள்வோம்.

Kanguva

முதலாவதாக இப்படத்தின் பாசிட்டிவ் என்னவென்றால் பீரியாடிக் போர்ஷனில் நடிகர் சூர்யாவின் தோற்றம் மிகவும் அற்புதமாக இருக்கின்றது. வித்தியாசமான கெட்டப்பில் அனைவரையும் கவர்ந்திருக்கின்றார். படத்தின் விஷுவல் மிகச் சிறப்பாக இருக்கின்றது. ஆர்ட் ஒர்க், காஸ்ட்யூம்ஸ் அனைத்தையும் இயக்குனர் சிறுத்தை சிவா மிகச் சிறப்பாக தேர்ந்தெடுத்து இருக்கின்றார்.

படத்திலிருந்த பைட் சீக்வென்ஸ் மிக பிரம்மாண்டமாக காட்டப்பட்டிருக்கின்றது. மேலும் யாரும் எதிர்பார்க்காத நடிகர் கார்த்தியின் கேமியோ கதாபாத்திரமும் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது. இது அனைத்துமே படத்தின் பிளஸ் பாயிண்ட்டாக கூறலாம். அதற்கு அடுத்ததாக நெகட்டிவ் என்றால் படத்தின் முதல் அரை மணி நேரம் கிரிஞ்சாக இருக்கின்றது. படத்தில் சூர்யாவை தவிர்த்து மற்ற நடிகர்களின் கதாபாத்திரங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.

இதையும் படிங்க: Kanguva: ‘கங்குவா’ ரிலீஸுக்கு முன் மொத்த டீமும் கும்மியடிச்ச தருணம்.. லிஸ்ட் போட்டு கலாய்ச்சிட்டாரே

படத்தின் கதை மற்றும் எமோஷனல் காட்சிகள் ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு நெருக்கமாக இல்லை என்று கூறப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் தேவி ஸ்ரீ பிரசாந்தின் இசை பலரையும் காதுகளை பொத்திக் கொள்ள வைத்துள்ளது. படத்தில் சத்தமான இசை இரைச்சலை கொடுப்பது போன்ற ஒரு உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருப்பதாக கூறி வருகிறார்கள். நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் மெனக்கெடல் அனைத்துமே படத்தில் மிகச்சிறப்பாக இருந்திருக்கின்றது என்று ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்

ramya suresh

Recent Posts

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

46 minutes ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

48 minutes ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

50 minutes ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

5 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

14 hours ago