More
Categories: Cinema News latest news

முடிஞ்சா என்கிட்ட மோதி ஜெயிச்சு பாரு! சூப்பர் ஸ்டாருக்கு சேலஞ்ச் விட்ட பவர் ஸ்டார்

Actor Rajinikanth: இந்தியாவே கொண்டாடும் நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு திடீரென சேலஞ்ச் விட்டிருக்கிறார் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். அவர் பகிர்ந்த ஒரு வீடியோதான் இன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. எப்படி சூப்பர் ஸ்டார் என ரஜினியை கொண்டாடி வருகிறோமோ அதே போல பவர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஸ்ரீனிவாசன்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். சந்தானம் தயாரிப்பில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தின் மூலம் ஒரு முழுமையான நடிகராக மாறினார் பவர் ஸ்டார். அந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றினார். இதற்கு முன்பாகவே லத்திகா என்ற படத்தை தயாரித்தார் பவர் ஸ்டார்.

இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் ஹாஃப் நல்லா போச்சு!.. செகண்ட் ஹாஃப் தான் செதச்சிட்டாங்க!.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!..

ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. இருந்தாலும் கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு ஒரு சில படங்களில் நடித்து வந்தார் பவர்ஸ்டார். சினிமா வாழ்க்கையை விட இவரின் சொந்த வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் தான் சுவாரஸ்யமானதாக இருக்கும். பண மோசடி செய்து போலீஸாரால் ஒரு சமயம் கைதுசெய்யப்பட்டார் பவர் ஸ்டார்.

இருந்தாலும் பிணையில் விடுதலையானார். அதன் பிறகு திடீரென தன் கணவரை காணவில்லை என பவர்ஸ்டாரின் மனைவி போலீஸில் புகார் அளித்தார். அதில் பவர் ஸ்டாரை யாரோ கடத்தி சென்றிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகளை கடந்து இன்று ஒரு தனியார் சேனலில் மருத்துவம் பற்றி பேசிக் கொண்டு தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: வரிசையா செஞ்சுரி அடிக்கும் மல்லுவுட்!.. ஆட்டநாயகனாக மாறிய ஆடுஜீவிதம்!.. இத்தனை கோடி வசூலா?

இந்த நிலையில்தான் ரஜினியை ட்ரோல் செய்யும் விதமாக ஒரு சேனலில் பவர் ஸ்டார் பேசியது வைரலாகி வருகின்றது. அதில் ரஜினி தனி ஆளாக நின்று ஜெயித்துக் காட்டட்டும். கன்னடம், மலையாளம் என மற்ற மொழி நடிகர்களை உடன் நடிக்க வைத்து அதன் மூலம் புகழை தேடிக் கொள்வது ஒரு புகழா? விஜயை எடுத்துக் கொண்டால் அவருடைய திறமையை வைத்து ஜெயித்துக் காட்டுகிறார்.

அஜித்தை எடுத்துக் கொண்டால் அவருடைய திறமையை வைத்து ஜெயிக்கிறார். ஆனால் ரஜினி தனி ஆளாக எங்கே ஜெயித்தார்? முடிந்தால் என்னை கூப்பிடட்டும். நானும் வருகிறேன். களத்தில் ஒன்றாக சந்திக்கலாம். நானா அவரா என பார்ப்போம். உனக்கு எவ்வளவு ரசிகர்கள் . எனக்கு எவ்வளவு ரசிகர்கள் என பார்த்து விடலாம் என மிக தைரியமாக சவால் விட்டிருக்கிறார் பவர் ஸ்டார்.

இதையும் படிங்க: வெளிநாட்டில் பாஸ்போர்ட்டை மிஸ் பண்ண குமரிமுத்து! மறுநாள் சூட்டிங்.. எப்படி வந்தார் தெரியுமா

Published by
Rohini

Recent Posts