சந்தானத்தை எதிர்த்து அடிவாங்கியவரு.. விஜயை எதிர்த்தா சும்மா விடுவாங்களா? பவர்ஸ்டாரின் பரிதாப நிலை

power
நேற்று ஒரு பேட்டி ஒட்டுமொத்த தவெக தொண்டர்கள் அனைவரையும் கதி கலங்க வைத்துவிட்டது. அது வேறொன்றும் இல்லை. பவர் ஸ்டாரின் பேட்டிதான். ஏதோ ஒரு பட விழாவிற்கு வந்தவரை பிடித்து விஜயின் அரசியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு அவர் எந்த தொகுதியில் நின்னாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று அசால்டாக சொல்லி சென்றார் பவர் ஸ்டார்.
அவர் கூடினாலும் கூட்டம் வரும், நான் கூடினாலும் கூட்டம் வரும் என்று சொல்லி இருந்தார். இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் அவருடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதாவது நடிகர்கள் பல பேர் தன்னுடைய நிலை என்ன என்பது பற்றி தெரியாமல் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் பவர்ஸ்டார் சீனிவாசனும் இருக்கிறார்.
ஆனால் அவர் வளர்ந்த விதமே அப்படித்தான். நகைச்சுவை நடிகர் என்று சொல்லப்பட்டாலும் அவருடைய படத்தில் ஏதாவது நகைச்சுவை இருந்ததா என்றால் இல்லை. நல்ல வேளையாக சந்தானம் படத்தில் நடிச்சதனால் அவர் வரும் காட்சியினால் நாம் சிரிக்க முடிந்தது. அதன் பிறகு கொஞ்ச நாள் கழித்து சந்தானத்தை குறை சொல்ல ஆரம்பித்து விட்டார். என்னால் தான் சந்தானம் நிறைய சம்பாதித்தார் என்றெல்லாம் பவர்ஸ்டார் சொல்ல சந்தானம் அவரை கழட்டிவிட்டார்.

அதனால் வருமானமும் இல்லாமல் ஏற்கனவே சேர்த்து வைத்த பணத்தை இந்த மாதிரி வெட்டி பந்தாக்கே காலி பண்ணி அதில் பாதி பேர் அவரை ஏமாற்றி சென்று விட்டார்கள். கடைசி எல்லாம் போய் மருத்துவமனையில் சேர்ந்து பில் கட்ட பணமே இல்லாமல் வீழ்ந்தது தான் மிச்சம். அப்படிப்பட்டவரை பொழைக்க வைத்து தூக்கி கொண்டு வந்து விட்டார்கள். வந்தவர் சும்மா இல்லாமல் விஜயை எதிர்த்து அரசியலில் நிற்பேன் அப்படின்னு சொல்கிறார். இது எங்க போய் முடியப் போகிறதோ என அந்தணன் கூறியிருக்கிறார்.