படம் பார்க்க வந்தால் ஒரு பாட்டில் குவார்ட்டர்… படத்தை ஓட வைக்க பவர் ஸ்டார் செய்த கூத்து…

by Arun Prasad |
படம் பார்க்க வந்தால் ஒரு பாட்டில் குவார்ட்டர்… படத்தை ஓட வைக்க பவர் ஸ்டார் செய்த கூத்து…
X

பவர் ஸ்டார் என்று அறியப்படும் சீனிவாசன் தொடக்கத்தில் “நீதானா அவன்”, “மண்டபம்” போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பின் 2013 ஆம் ஆண்டு அவர் நடித்த “கண்ணா லட்டுத் திண்ண ஆசையா” என்ற திரைப்படம் அவரை பரவலாக அறியவைத்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து “மாங்கா”, “வாலிப ராஜா”, “கவண்”, “ஓடு ராஜா ஓடு” என பல திரைப்படங்களில் காமெடி ரோலில் நடிக்கத் தொடங்கினார்.

எனினும் பவர் ஸ்டார் என்றாலே பலருக்கும் ஞாபகம் வருவது “லத்திகா” என்ற திரைப்படம்தான். இத்திரைப்படத்தை பவர் ஸ்டார் சீனிவாசனே தயாரித்து இயக்கவும் செய்தார். தனது மகளின் பெயரான லத்திகா என்ற பெயரைத்தான் இத்திரைப்படத்தின் டைட்டிலாக வைத்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பவர் ஸ்டார், “லத்திகா” திரைப்படத்தை ஓட வைப்பதற்கு, தான் செய்த பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதாவது லத்திகா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது பார்வையாளர்கள் யாருமே படம் பார்ப்பதற்கு வரவில்லையாம். ஆதலால அவருக்கு நெருக்கமான நண்பர்களிடம் இது குறித்து பேசியுள்ளார். அவர்கள் “தினமும் 200 பேரை திரையரங்கிற்கு அனுப்புகிறோம். ஆனால் படத்தை பார்க்க வருபவர்களுக்கு ஒரு மது பாட்டிலும், பிரியாணி பொட்டலமும் தலைக்கு 100 ரூபாயும் தரவேண்டும்” என கூறியிருக்கிறார்கள். இதற்கு சீனிவாசனும் ஒத்துக்கொண்டுவிட்டாராம்.

இவ்வாறு “லத்திகா” திரைப்படத்தை ஒரே திரையரங்கில் 300 நாட்களுக்கும் மேல் திரையிட்டுள்ளார் பவர் ஸ்டார். அதன் பின் இத்திரைப்படத்திகான விழாவில் கலந்துகொண்ட திருமாவளவன், சீனிவாசனுக்கு பவர் ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் 500 கோடி ரூபாய்க்கு நிதி பெற்றுத் தருவதாக கூறி ரூ. 10 கோடியை முன்பணமாக பெற்றுக்கொண்ட மோசடி வழக்கில் சீனிவாசன், திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு அதன் பின் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story