Connect with us

Cinema News

சூரி மாதிரி இல்லை!.. எப்பவுமே பிரபாஸ் சீனியர் நடிகர்களை எப்படி மதிக்கிறாரு பாருங்க!..

ஹீரோவான உடனே நடிகர் சூரி தனது கருடன் பட விழாவில் நடிகர் சசிகுமாரை மதிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. ஆனால், நடிகர் பிரபாஸ் தன்னுடைய சீனியர் எப்படி மதித்து பேசுகிறார் என்பதை பாருங்கள் என ரசிகர்கள் ஒரு வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

பாகுபலி படத்துக்கு முன்பாக நடிகர் கமல்ஹாசனின் அருகில் அமர்வதே தனக்கு கிடைத்த பாக்கியம் என பிரபாஸ் பேசியிருந்தார். கல்கி படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற கல்கி படத்தின் புஜ்ஜி கார் அறிமுக விழாவில் பேசிய பிரபாஸ் கமல்ஹாசன் மற்றும் அமிதாப்பச்சன் போன்ற லெஜெண்ட் வருடம் இணைந்து நடிப்பது தனக்கு கிடைத்த பாக்கியம் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேட்டி கட்டி ஆடிய ஒரே நடிகர் இவர்தானாம்! இவ்ளோ வேடிக்கை நடந்துருக்கா?

மேலும், அவர்கள் இருவரும் என்னுடன் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம் என்றும் அவர் சீனியர் நடிகர்களை கௌரவப்படுத்தி தலைக்கனம் இல்லாமல் பேசியுள்ளார்.

கல்கி படத்தின் ஹீரோ பிரபாஸ் தான் என்றாலும் அந்த கெத்தை காட்டாமல் டவுன் டு எர்த்தாக அவர் இருப்பதை பல கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கொஞ்சம் வளர்ந்த உடனே அவர்கள் போடும் ஆட்டம் ரொம்ப ஓவராக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ராஷ்மிகாவுடன் ராசியான நடிகை!.. புஷ்பா 2வில் சமந்தாவுக்கு கெட்டவுட்.. யாரு ஆட போறா தெரியுமா?..

பிரபாஸ் நடித்துள்ள கல்கி திரைப்படம் ஜூன் மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஹாலிவுட் தரத்துக்கு அந்த படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் வசூல் வேட்டையாடும் என தெரிகிறது. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவரகொண்டா ஸ்பெஷல் கேமராவாக நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறி வருகின்றனர். நடிகர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் புஜ்ஜி காருக்கு குரல் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: நான் சரக்கடிக்கறத நிறுத்த காரணமே அவர்தான்!.. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே ராதாரவி!..

google news
Continue Reading

More in Cinema News

To Top