600 கோடி வசூலையே நெருங்க திணறும் ரஜினி படம்!.. அசால்ட்டா அத்தனை கோடி பட்ஜெட்டில் நடிக்கும் கமல்?..
ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்றும் ரஜினி ரெக்கார்டு பிரேக்கர் இல்லை ரெக்கார்டு மேக்கர் என கலாநிதி மாறனே கொண்டாடிய நிலையில், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் 20 நாட்கள் ஆகியும் 600 கோடி வசூலை நெருங்க திணறிக் கொண்டிருக்கிறது.
கன்னடத்தில் நேற்று வந்த நடிகர் யஷ் படமெல்லாம் அசால்ட்டா 1000 கோடி வசூலை அள்ளி சம்பவம் பண்ணிக் கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு நீண்ட கேப்பிற்கு பிறகு கமல் நடித்த விக்ரம் படம் நடத்திய வசூல் சாதனையை ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் முறியடித்து விட்ட நிலையில், சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஆண்டவர் ரசிகர்களை அடி வெளுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கால் சென்டர்ல கமல்ஹாசன்!.. அமெரிக்காவுல என்னை வேலை பண்ணிட்டு இருக்காரு பாருங்க ஆண்டவர்!..
இந்நிலையில், ரஜினி ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கமல் ரசிகர்கள் போட்ட போடு இருக்கே, திரையுலகமே ஆடிப்போய் கிடக்கிறது. அது என்னவென்றால், ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூலை எட்டவே பல நாட்களாக முணங்கிக் கொண்டிருக்க, அசால்ட்டாக கமல்ஹாசன் 600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்ட படத்திலேயே நடித்து வருகிறார் என டிரெண்ட் செய்து ரஜினி ரசிகர்களின் வாயை பலமாக அடித்துள்ளனர்.
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வரும் கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் பட்ஜெட் 600 கோடி ரூபாய் என்கின்றனர். 600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் வெறும் 20 நாட்கள் வில்லனாக நடிக்க கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: ஷாருக்கானை ஏமாத்திட்டு சைக்கிள் கேப்பில் அட்லீ ஓட்டிய இன்னொரு படம்!.. மேடையில் வச்சு செய்த ஜவான்!..
அதுமட்டுமில்ல, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியாகும் இந்தியன் 2 திரைப்படம் வந்தால் இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் உச்சத்தை தொடும் என்றும் அப்போ தெரியும் யாரு ரெக்கார்டு மேக்கர் என சோஷியல் மீடியா சண்டை ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த விஜய், அஜித் ரசிகர்கள் எல்லாம் இப்பவும் சீனியர் நடிகர்கள் இந்த போடு போடுறாங்களே என கப்சிப் என பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.