அய்யா, ஏற்கனவே அவர் பல்ப் தான் வாங்கிட்டு இருக்காரு.. அடுத்த ஆட்டை ரெடி செய்த அனிமல் இயக்குனர்..

Published on: February 29, 2024
---Advertisement---

Sandeep Reddy vanga: பேன் இந்தியா இயக்குனர்களிலே ஹிட் கொடுத்தாலும் அதிகம் விமர்சிக்கப்படும் ஒரு இயக்குனராக இருப்பவர் சந்திப் ரெட்டி வங்கா. இவர் தற்போது இயக்க இருக்கும் ஒரு படத்தின் அப்டேட் குறித்தும் அந்த படத்தில் நடிக்கும் நடிகர் குறித்தும் ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா.  முதல் படத்திலேயே விஜய் தேவரகொண்டாவை வைத்து மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தார். படம் சில விஷயங்களில் விமர்சனத்திற்கு உள்ளானாலும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: ‘கருடன்’ படத்தில் சூரிக்கு 8 கோடி.. சசிகுமாருக்கு தெருகோடியா? பாலா செஞ்ச அட்டூழியம் எங்க வந்து நிக்குது?

ஆனால் அர்ஜுன் ரெட்டியின் ஒரிஜினல் வெர்சனுக்கு இருக்கும் ரசிகர்கள் இன்றும் அதை தான் விரும்பினர். அப்படத்தினை அர்ஜுன் ரெட்டியின் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங்கை பாலிவுட்டில் இயக்கினார் சந்தீப் ரெட்டி வங்கா. கபீர் சிங் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற சந்தீப் ரெட்டிக்கு அங்கும் ரசிகர்கள் உயர்ந்தனர்.

இதைத்தொடர்ந்து ரன்பீர் கபூரை வைத்து அனிமல் என்ற படத்தில் இயக்கியிருந்தார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்ப படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்தது. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா இருவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை குவித்தது.

இதையும் படிங்க: வேற எதாச்சும் மாத்துங்கப்பா… செம மொக்கையா போகுது… காத்திருக்கும் சிறகடிக்க ஆசை ரசிகர்கள்…

பலமொழிகளில் வெளியான அப்படம் தமிழ் ரசிகர்களிடம் நெகட்டிவ் விமர்சனங்களே பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சில அப்படத்தை மோசமாக விமர்சித்தனர். அனிமல் மிகப்பெரிய மன உளைச்சலை பலருக்கு கொடுத்ததாகவும் ட்வீட்கள் பல எக்ஸ் தளத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அடுத்த பிரபாசை வைத்து ஸ்பிரீட் என்ற படம் உருவாக இருக்கிறதாம்.

சந்தீப் கூறுகையில் இப்படத்தில் பிரபாஸ் நேர்மை தவறாத ஒரு காவல் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும், படம் வெளியானால் பாக்ஸ் ஆபிஸை அசைத்து பார்க்கும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். பாகுபலி படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய தோல்வியை மட்டுமே தழுவி இருக்கிறது. சமீபத்தில் வெளியான சலாம் திரைப்படம் கூட பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.