தூங்குனது போதும் அவதாரம் எடுத்து எழுந்து வாங்க கல்கி!.. பிரபாஸ் படத்தை பங்கம் பண்ணும் ரசிகர்கள்!..

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி உள்ள கல்கி படம் என்ன ஆச்சு? அந்த படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வரவில்லை என ரசிகர்கள் கொந்தளித்து எழுந்துருங்க கல்கி என ஹாஷ்டேக்கையே உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.
நடிகர் பிரபாஸ் கல்கி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக ராஜாசாப் படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். இந்நிலையில், கல்கி படம் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் புரோமோஷன் ஆரம்பிக்காமல் அமைதியாக உள்ளனரே ஏன் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: அம்மா சொன்னதால் மியூசிக் போட்ட இளையராஜா!.. இசைஞானிக்கு இவ்வளவு தாய்ப்பாசமா?!..
அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தின் டீசர் ஒரு ஏப்ரல் 8ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து அந்த படத்தின் அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. டோலிவுட்டில் பிரபாஸ் ரசிகர்கள் மற்றும் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.
சமீபத்தில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சேர்ந்து பிரபாஸ் ரசிகர்களை அடித்து ஓடவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்கி படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னதாக வெளியானது. இந்த ஆண்டு கல்கி படம் வெளியாக உள்ள நிலையில், இன்னமும் அந்த படத்தின் டிரைலர் மற்றும் புரோமோஷன் பணிகளை கூட படக்குழு ஆரம்பிக்கவில்லையே என்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் கூட வெளியாகவில்லை என ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.
இதையும் படிங்க: என் காமெடியை கெடுத்து விட்டான் ‘கருப்பன்’… விஜயகாந்தை நக்கலடித்த கவுண்டமணி…
ஏகப்பட்ட சிஜி வேலைகள் கல்கி படத்தில் உள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்ட பின்னர்தான் கல்கி படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் பிரபாஸ், திஷா பதானி சமீபத்தில் இத்தாலியில் பாடல் காட்சி ஒன்றில் நடித்து வந்த நிலையில், அதன் புகைப்படங்களை திஷா பதானி வெளியிட்டு இருந்தார். அதில், பிரபாஸின் உருவத்தை பார்த்த ரசிகர்கள் பாடி ஷேமிங் பண்ண ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.