சனிக்கிழமை சரிவா?.. சக்சஸா?.. கல்கி 2898 ஏடி 3 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா பங்கு?..

Published on: June 30, 2024
---Advertisement---

கல்கி 2898 ஏடி திரைப்படம் பற்றிய பேச்சுக்கள் உலகம் முழுவதும் பரவி வருகிறது. சினிமா பிரபலங்கள் பலரும் தொடர்ந்து அந்த படத்துக்கு புரமோஷன் செய்யும் விதமாக படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். வெள்ளிக்கிழமை திடீரென பெரிய சரிவை சந்தித்த பிரபாஸ் படத்துக்கு ஹைப்பை எகிற வைக்க ரஜினிகாந்த், சிரஞ்சீவி, யஷ், அல்லு அர்ஜுன் என வரிசையாக பல முன்னணி நடிகர்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.

கல்கி படத்துக்கு பிரபலங்கள் கொடுத்த பாராட்டு காரணமாக சனிக்கிழமை வசூல் பெரிதளவில் குறையாமல் சீராகவே இருந்திருப்பதாகவே தெரிகிறது. இந்தியாவில் மட்டும் 3வது நாளில் 60.76 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: கெடைச்ச வாய்ப்புல கோல் போட்டு அசத்திய வாலி… அண்ணாவிடம் இருந்து வந்த திருத்தம்..!

கல்கி 2898 ஏடி படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக 2 நாட்கள் வசூல் உலகளவில் 298.5 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக அறிவித்தது. இந்நிலையில், 3வது நாள் உலகளவில் கல்கி 2898 ஏடி திரைப்படம் 360 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையான இன்று கல்கி 2898 ஏடி படத்துக்கு நல்ல புக்கிங் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், திங்கட்கிழமை முதல் டிக்கெட் புக்கிங் டல் அடித்து காணப்படுகிறது. வார நாட்களிலும் படம் பிக்கப் ஆனால் தான் 1000 கோடி ரூபாய் வசூலை பெறும் என்றும் இல்லையென்றால் அதிகபட்சம் 600 முதல் 700 கோடி தான் வரும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இதையும் படிங்க: இந்த படம் மட்டும் வரட்டும் பாருங்க!.. எஸ்.கே.வின் நெகட்டிவ் இமேஜே மொத்தமா மாறிடுமாம்!..

நாக் அஸ்வின் இயக்கிய இந்த படத்துக்கு ஓவர்சீஸில் ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு இருந்து வந்த நிலையில் தான் இந்தளவுக்கு வசூல் வந்திருப்பதாக கூறுகின்றனர். இந்தியாவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டுமே படத்திற்கு வரவேற்பு உள்ளது என்றும் இந்தியில் பெரிதாக வரவேற்பு இல்லை என்றும் கூறுகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.