பிரபாஸோட அடுத்த படம் இதுதான்!.. மத்த படங்களை தூக்கி கிடப்புல போட்ட கல்கி ஹீரோ!.. ஷூட்டிங் எப்போ?

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் 680 கோடி ரூபாய் வசூலை இதுவரை அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வார இறுதியில் 800 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாக் அஸ்வின் இயக்கிய கல்கி 2898 ஏடி திரைப்படத்துக்கு இந்தியாவிலும் ஓவர்சீஸிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் காரணமாக 600 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 680 கோடி வரை ஒரே வாரத்தில் வசூல் செய்துள்ளது.

இதையும் படிங்க: வேறு வழியில்லாமல் நிக்கோலை கரம்பிடிக்கும் வரலட்சுமி! பின்னணி காரணம் என்ன தெரியுமா?

கல்கி 2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் நடிகர் பிரபாஸ் ராஜாசாப் படத்தில் நடிக்க போதாக தகவல்கள் வெளியாகின. இன்னொரு பக்கம் அனிமல் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா ஸ்பிரிட் படத்தை பிரபாஸை வைத்து இயக்கப் போவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படத்தின் செகண்ட் பார்டும் பெட்டிங்கில் உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக பிரபாஸ் சலார் இரண்டாம் பாகத்தில் தான் முதலில் நடிக்கப் போவதாகவும் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி சலார் 2 படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஆரம்பம் ஆகும் என்கிற புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: பாலாவுக்குக் கொடுத்த கடனை திருப்பி கேட்காத சூர்யா… பிரபலம் சொல்லும் பின்னணி தகவல்

நடிகர் யாஷ்ஷை வைத்து கேஜிஎஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நில் அடுத்ததாக ஜூனியர் எம்ஜிஆர் நடிக்கும் டிராகன் படத்தையும் இயக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், டிராகன் படத்திற்கு முன்னதாகவே சலார் பார்ட் 2 வை முடித்துவிட திட்டமிட்டு இருப்பதாகவும் ஏற்கனவே அந்த படத்தின் 60% சூட்டிங் நிறைவு பெற்றதாக கூறுகின்றனர்.

வரிசையாக பிரபாஸ் கைவசம் அடுத்தடுத்து சலார் 2, ஸ்பிரிட், ராஜாசாப், கல்கி 2 என பான் இந்தியா படங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு படமும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்கின்றனர். 2027ம் ஆண்டுக்குள் பிரபாஸ் இந்திய சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக இருப்பார் என்கின்றனர்.

இதையும் படிங்க: ஒரு முறை சொல்லிட்டா பின்வாங்குறதே இல்ல! தொடர்ந்து கேப்டன் குடும்பத்துக்காக உதவிக்கரம் நீட்டும் லாரன்ஸ்

 

Related Articles

Next Story