பிரபாஸ் மிரட்ட காத்திருக்கும் சலார் படத்தின் கதை என்ன தெரியுமா?.. செம ட்விஸ்ட் வைத்த பிரசாந்த் நீல்!..

by Saranya M |   ( Updated:2023-11-28 09:07:02  )
பிரபாஸ் மிரட்ட காத்திருக்கும் சலார் படத்தின் கதை என்ன தெரியுமா?.. செம ட்விஸ்ட் வைத்த பிரசாந்த் நீல்!..
X

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த பான் இந்தியா படங்கள் பெரிய பட்ஜெட்டில் வெளியானாலும் பெரிய சொதப்பலை சந்தித்து ஃபிளாப் ஆகி வருகின்றன. இந்நிலையில், ராஜமவுலி அளவுக்கு ஒரு நல்ல இயக்குநர் படத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்த பிரபாஸ் கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்துள்ள படம் தான் சலார்.

இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 22ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், அந்த படத்தின் கதை குறித்த தகவல்கள் தற்போது சோஷியல் மீடியாவில் லீக் ஆகி உள்ளன.

இதையும் படிங்க: மொத்த அழகும் அங்க இருக்கு!.. யாஷிகாவை ஏடாகூடமா ரசிக்கும் நெட்டிசன்ஸ்!….

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் நடிப்பில் சலார் படம் உருவாகி உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

பிருத்விராஜ் தான் இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில், கதைப்படி பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் இருவருமே சிறு வயதில் இருந்து ரொம்பவே நெருங்கிய நண்பர்களாக இருந்து ஒரு விஷயத்துக்காக இருவரும் பிரிந்து எதிரும் புதிருமாக மாறுவது தான் படத்தின் கதை என சோஷியல் மீடியாவில் ஒரு கதை தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஞானவேல் அடக்கி வாசி!.. ஒழுங்கா மன்னிப்பு கேளு!. அமீருக்கு ஆதரவா களமிறங்கிய பாரதிராஜா…

பிரபாஸுக்கு சமமான கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் இந்த படத்தில் நடித்துள்ளார். சிறு வயதில் ஒன்றாக பழகிய நண்பர்களாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அந்த ராஜ்ஜியத்தை ஆழணும் என்கிற வெறியுடன் பிருத்விராஜ் மாறும் நிலையில் தான் அவரை எதிர்க்க வேண்டிய சூழலுக்கு பிரபாஸ் தள்ளப்படுகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்த ஆண்டு ஷாருக்கானின் டன்கி திரைப்படத்துடன் சலார் படம் நேரடியாக மோதலில் ஈடுபடவுள்ள நிலையில், எந்த படம் இந்தி பெல்ட்டில் பெரும் வசூலை குவிக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Next Story