ஆதிபுருஷுக்கு ஆனது மாதிரி நடந்துட்டா என்ன பண்றது!.. சலார் படத்திற்காக பிரபாஸ் எடுக்கும் பெரிய ரிஸ்க்!..

Published on: September 3, 2023
---Advertisement---

நடிகர் பிரபாஸ் நடிப்பில் இந்த ஆண்டு பெரும் பொருட்செலவில் வெளியாகி படுதோல்வியை சந்தித்த படம் ஆதிபுருஷ். ஜனவரி மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய அந்த படத்தின் சிஜி சரியில்லை என மீண்டும் நூறு கோடி செலவு செய்து 6 மாதங்களை வீணடித்து படத்தை உருவாக்கினாலும் அந்த படமும் அட்டு ஃபிளாப் ஆகி தியேட்டரை விட்டே தெறித்து ஓடியது.

ராமாயண கதையை படமாக எடுத்தால் வட இந்தியாவில் வசூலை அள்ளி விடலாம் என நினைத்த படக்குழுவுக்கு ராமாயணத்தையே சரியாக எடுக்கவில்லை என்றும் இந்து மதத்தையே கொச்சைப்படுத்தி விட்டனர் என கிளம்பிய பாய்காட் டிரெண்டிங் தான் பெரிய தலைவலியாகவே மாறி பலரும் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு கொண்டு போய் விட்டது.

இதையும் படிங்க: அடுத்த கிரணா மாறிட்டாரா அமலா பால்!.. கோவாவில் குடியும் குடித்தனமுமாக இவரும் செட்டில் ஆகிடுவாரு போல!..

இந்நிலையில், கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் நிச்சயம் பிரபாஸுக்கு பாகுபலியை விட மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்றுத் தரும் என எதிர்பார்த்து வந்த நிலையில், இந்த மாதம் செப்டம்பர் 28ம் தேதி படம் ரிலீஸ் ஆகப் போவதில்லை என்றும் நவம்பர் மாதத்துக்கு தள்ளிப் போகிறது என்றும் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

நடிகர் பிரபாஸின் முகத்திற்கு சில டிஏஜிங் பணிகள் எல்லாம் நடக்கிறது என்றும் அதற்காகத்தான் இந்த கால தாமதம் என ஏகப்பட்ட புரளிகள் கிளம்ப ஆரம்பித்தன.

இதையும் படிங்க: நான்தான் மாஸ்!.. எனக்கு ஸ்டார்னா அவங்கதான்!. அடுக்கு மொழியில் அசத்திய டி.ராஜேந்தர்..

இந்நிலையில், அதெல்லாம் கிடையாது, சொன்ன தேதியில் சலார் திரைப்படம் வெளியாகும் என உறுதியான தகவல்கள் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகி உள்ள நிலையில், பிரபாஸ் ரசிகர்கள் #SalaarOnSep28th சலார் திரைப்படம் வருவது உறுதி என்றும் ஷாருக்கானின் ஜவான் படத்தின் வசூலுக்கு இந்த மாதமே படம் வேட்டு வைக்கப் போவது உறுதி என பிரபாஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.