More
Categories: Cinema News latest news

டைனோசர் பிரபாஸ் வராரு வழிவிடுங்க!.. சலார் டிரெய்லர் எப்போ தெரியுமா?.. தீபாவளியே சும்மா தெறிக்குது!..

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடிகர் பிரபாஸின் சலார் படம் வெளியாக உள்ள நிலையில், தீபாவளிக்காவது டிரெய்லரை வெளியிட்டு பிரபாஸின் தரிசனத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் என்றாலும், டிரெய்லர் ரிலீஸ் தேதி மற்றும் நேரத்தை அறிவித்து ஆறுதல் கொடுத்துள்ளனர்.

பிரபாஸின் லுக் எப்படி இருக்கும் என ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு டைனோசர் என பில்டப் கொடுத்த அளவுக்கு தாறுமாறான லுக்குடன் கையில் பெரிய துப்பாக்கியை வைத்துக் கொண்டு தீபாவளி வாழ்த்துக்களை சொல்லி உள்ளார் பிரபாஸ்.

Advertising
Advertising

இதையும் படிங்க: விளையாட்டுல மதத்தை கலந்து வச்சிருக்கீங்க!.. ரஜினியை வைத்தே லால் சலாம் டீசரை ஓட்டிய ஐஸ்வர்யா!..

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி முதல் மற்றும் பாகுபலி 2 உள்ளிட்ட படங்களால் உலகளவில் பிரபலமானவர் பிரபாஸ். அதன் பிறகு இவர் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை சந்தித்தன.

ராஜமெளலி இல்லை என்றால் பிரபாஸ் ஒரு பொருட்டே இல்லை எனக் கூறப்பட்டு ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், கேஜிஎஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இணைந்துள்ளார் பிரபாஸ்.

இதையும் படிங்க: ஜெயம் ரவியின் அடுத்த சம்பவம்.. இதாவது இறைவன் போல இல்லாமல் இருந்தால் சரி!.. சைரன் டீசர் எப்படி இருக்கு?

கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ஏகப்பட்ட சிஜி வேலைகள் காரணமாக தள்ளிப் போய்க் கொண்டே இருந்த நிலையில், ஒரு வழியாக இந்த ஆண்டு டிசர்ம்பர் 22ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில், வரும் டிசம்பர் 1ம் தேதி மாலை 7.19 மணிக்கு பிரபாஸ், ஸ்ருதி ஹாசன், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள சலார் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்கிற அறிவிப்பு தீபாவளி ஸ்பெஷலாக இன்று வெளியாகி உள்ளது.

Published by
Saranya M

Recent Posts