இதனாலதாங்க எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல.... மனம் திறந்த பாகுபலி நடிகர்...!
பாகுபலி என்ற ஒற்றை படம் மூலம் ஒட்டுமொத்த உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த ஹீரோ என்றால் அது பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் தான். பாகுபலி படம் தான் திரையுலகில் பிரபாஸிற்கு ஒரு தனி அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
அதுமட்டும் இன்றி உலகளவில் அழகான ஆண்கள் பட்டியலில் அதிக ஓட்டுகளை பெற்று பிரபாஸ் முதலிடம் பிடித்தார். மேலும் சுமார் 6 ஆயிரம் பெண்களுக்கு மேல் பிரபாஸை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் பிரபாஸ் நிராகரித்தார்.
தற்போது 42 வயதாகும் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதன்படி பிரபாஸ் தற்போது ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 11 ஆம் தேதி நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரபாஸிடம் காதல் பற்றிய உங்களின் கணிப்புகள் எப்படி இருக்கும் என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பிரபாஸ், "காதல் பற்றிய என் கணிப்புகள் எப்போதும் தவறாகவே இருக்கும். அதனால்தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் காதலை சரியாக கணித்திருந்தால் எப்போதோ திருமணம் ஆகியிருக்கும்" என மிகவும் வெளிப்படையாகவும் நகைச்சுவையாகவும் பதிலளித்துள்ளார்.
முன்னதாக பிரபாஸ் நடிகை அனுஷ்காவை காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டது. மேலும் பாகுபலி படத்தில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி நன்கு வொர்க் அவுட் ஆனதால், இவர்கள் இருவரின் பெரும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இதுதவிர சாஹோ படத்திலும் அனுஷ்காவின் பெயரை பிரபாஸ் சிபாரிசு செய்திருந்தாராம்.
ஆனால் அந்த சமயத்தில் அனுஷ்கா குண்டாக இருந்ததால் அந்த கதாபாத்திரம் ஷ்ரத்தா கபூருக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.