அந்த படத்தோட தோல்விக்கு இதுதான் காரணம்.... முதல் முறை தோல்வி குறித்து மனம் திறந்த மாஸ் நடிகர்!

by ராம் சுதன் |
prabhas
X

ஒரு நடிகரோ அல்லது இயக்குனரோ அவரது படம் தோல்வி அடைந்து விட்டது என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வது அரிதான ஒன்று. என்னதான் படம் ஓடவில்லை என்றாலும், ஏதாவது ஒரு காரணம் கூறி படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம் என சப்பைக்கட்டு கட்டுவார்கள்.

ஆனால் இங்கு ஒரு ஹீரோ தன் படத்தின் தோல்விக்கு காரணம் என்பதை மிகவும் வெளிப்படையாக அவரே தெரிவித்துள்ளார். அதனால் தான் அவர் ஹீரோவாக உள்ளார் போலும். அந்த ஹீரோ வேறு யாருமல்ல பாகுபலி படம் மூலம் வேர்ல்டு பேமஸ் ஆன நடிகர் பிரபாஸ் தான்.

சமீபத்தில் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம் என்ற படம் வெளியானது. முழுக்க முழுக்க காதல் படமாக உருவான இப்படம் கிட்டத்தட்ட ரூ.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் இப்படம் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் இழப்பை சந்தித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

radhe shyam

இதுதவிர இழப்பை ஈடுகட்டும் விதமாக நடிகர் பிரபாஸ் தான் வாங்கிய சம்பளத்தில் இருந்து ரூ.50 கோடியை திருப்பி கொடுத்த சம்பவமும் நடந்தது. இந்நிலையில், ராதே ஷ்யாம் படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து நடிகர் பிரபாஸ் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

அதன்படி அவர் கூறியதாவது, "கொரோனா காரணமாக இருக்கலாம் அல்லது நாங்கள் ஸ்கிரிப்ட்டில் ஏதேனும் தவறு செய்திருக்கலாம். ஒருவேளை மக்கள் என்னை அந்த ரோலில் பார்க்க விரும்பியிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். பாகுபலி வெற்றியால் நான் நடிக்கும் புது படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு அழுத்தம் இருப்பது உண்மை தான்.

parbhas1

ஆனால் எனக்கு அந்த மாதிரி அழுத்தம் எதுவும் இல்லை. பாகுபலி போன்ற படம் எனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். மக்களை தொடர்ந்து மகிழ்விக்க விரும்புகிறேன். அதற்காக தொடர்ந்து உழைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

Next Story