என்னடா இது சலாருக்கு வந்த சோதனை!.. காவாலா சுனீலுடன் பிரபாஸை கோர்த்து விட்டுட்டாங்களே!..

தமிழ் சினிமா ரசிகர்களும் தெலுங்கு சினிமா ரசிகர்களும் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் எல்லையை மீறி சண்டை போட்டு வருகின்றனர். தமிழ் சினிமா நடிகர்கள் தான் பெருசு என்றும் தெலுங்கு சினிமா நடிகர்கள் கால் தூசுக்கு கூட தமிழ் நடிகர்கள் வர மாட்டார்கள் என தெலுங்கு ரசிகர்களும் சண்டைப் போட்டு வருகின்றனர்.

சினிமா பிரபலங்களை இருவரும் மாற்றி மாற்றி ட்ரோல் செய்து வரும் நிலையில், சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட காமெடி காட்சிகளும் போட்டோ மீம்களும் வைரலாகி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி வருகின்றன.

இதையும் படிங்க: கை இல்லாத ஜாக்கெட்டு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு!.. விருந்து வைக்கும் பிரியங்கா மோகன்…

தமிழ் சினிமாவில் தெலுங்கு நடிகர்களும், தெலுங்கு சினிமாவில் தமிழ் நடிகர்களும் நடித்து வருகின்றனர். பிரபாஸின் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன், ரமணா, மைம் கோபி உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் நடித்திருந்தனர்.

அதே போல ஜெயிலர் படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் நடித்திருந்தார். இந்நிலையில், பிரபாஸின் நியூ லுக் எப்படி இருக்குன்னு பாருங்க என ஒரு போட்டோவை வெளியிட்டு ஜெயிலர் படத்தில் சுனில் போட்டிருந்த கெட்டப்புடன் மேட்ச் பண்ணி கோலிவுட் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தனுஷை விட இவரு கொல மாஸா இருக்காரே!.. கேப்டன் மில்லர் மிஸ் ஆனது போல ராயன் மிஸ்ஸே ஆகாது!..

பாலைய்யா அளவுக்கு மாஸாக ஒரு கோலிவுட் நடிகராவது இருக்காரா என்று தெலுங்கு ரசிகர்கள் கேட்க அர்ஜுனின் ஏழுமலை படத்தின் காட்சியையும் சியான் விக்ரமின் சாமி பட சீன்களையும் போட்டு ட்ரோல் செய்து சண்டையை பெரிதாக்கிக் கொண்டே போகின்றனர்.

 

Related Articles

Next Story