பாகுபலி படத்திற்காக பிரபாஸ் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா? என்னங்க சொல்றீங்க?
தெலுங்கு ரசிகர்கள் மற்றும் தெலுங்கு சினிமாவிற்கு மட்டுமே தெரியும் வகையில் மிகவும் சாதாரண ஒரு நடிகராக வலம் வந்த நடிகர் பிரபாஸ் தற்போது உலகளவில் புகழ் பெற்றுள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் பாகுபலி படம் தான். பிரபல இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான இப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது.
அதுவரை ஒரு சாதாரண ஹீரோவாக இருந்த பிரபாஸ் இந்த படத்திற்கு பின்னர் வேர்ல்டு ஃபேமஸ் ஆகிவிட்டார். உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகைகள் உருவாகி விட்டனர். மேலும் பிரபாஸின் மார்க்கெட்டும் மளமளவென உச்சம் தொட்டு விட்டது.
பாகுபலி படம் மூலம் கிடைத்த புகழ் காரணமாக தற்போது பிரபாஸ் பான் இந்தியா மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அனைத்து மொழிகளிலும் பிரபாஸுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை வைத்து பான் இந்தியா படங்களையே எடுக்க விரும்புகிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது பிரபாஸ் தான். ஆனால் பிரபாஸ் பாகுபலி படத்திற்காக வாங்கிய சம்பளத்தை கேட்டால் நீங்கள் அதிர்ச்சியில் உறைந்து விடுவீர்கள். அதன்படி நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் முதல் பாகத்திற்கு 20 கோடியும், இரண்டாம் பாகத்திற்கு 25 கோடியும் மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
தற்போது ஒரு படத்திற்கு மட்டுமே 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் பிரபாஸ் பாகுபலி போன்ற ஒரு பிரம்மாண்ட படத்திற்கு அதுவும் அவரின் கெரியரில் திருப்புமுனையாக அமைந்த ஒரு படத்திற்கு இவ்வளவு குறைவாக சம்பளம் பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.