இளையதிலகம் பிரபு நடிப்பில் 1990ல் சூப்பர்ஹிட்டான படங்கள் - ஒரு பார்வை
தமிழ்ப்படங்களில் இளையதிலகம் பிரபுவை பிடிக்காத ரசிகர்கள் யாருமே இருக்க முடியாது. கன்னம் குழி விழ அவர் சிரித்தாலே போதும். ஒட்டுமொத்த தாய்க்குலங்களும் அந்த சிரிப்பினில் மயங்கி விடுவார்கள்.
கள்ளம் கபடமற்ற அந்த குழந்தைத்தனமான சிரிப்பு வேறு எந்த நடிகருக்கும் வாய்க்காது. இந்த அழகான சிரிப்பை சின்னத்தம்பி படத்தில் காணலாம். இனி 1990களில் இவரது நடிப்பில் சக்கை போடு போட்ட படங்களைக் காணலாம்.
சின்னதம்பி
1992ல் வெளியான இந்தப்படம் பட்டி தொட்டி எங்கும் ரசிகர்களை ஆரவாரம் கொள்ளச் செய்தது. எங்கு பார்த்தாலும் சின்னதம்பியைப் பற்றித் தான் பேச்சு என்று இருந்தது. பி.வாசுவின் இயக்கத்தில் சூப்பர்ஹிட் அடித்த படம். பிரபுவுடன் இணைந்து குஷ்பூ, கவுண்டமணி, மனோரமா, ராதாரவி, ராஜேஷ், உதயபிரகாஷ், பாண்டு உள்பட பலர் நடித்துள்ளனர்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. தூளியிலே ஆட வந்த, போவோமா ஊர் கோலம், குயிலப் புடிச்சி, அட உச்சந்தல, அரைச்ச சந்தனம், நீ எங்N என் அன்பே ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப்படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் உள்பட தமிழக அரசு 7 விருதுகளைக் கொடுத்தது.
செந்தமிழ்ப்பாட்டு
1992ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் பி.வாசு. பிரபு, சுகன்யா, கஸ்தூரி, சுஜாதா, விஜயகுமார், கசான் கான், கவுண்டமணி உள்பட பலர் நடித்துள்ளனர். விஸ்வநாதன், இளையராஜா ஆகியோர் இணைந்து இசை அமைத்துள்ளனர்.
படத்தில் பாடல்கள் அனைத்தும் மெய்மறக்கச் செய்பவை. வண்ண வண்ண, அடி கோமாதா, சின்ன சின்ன தூறல், இந்த, கூட்டுக்கொரு, காலையில் கேட்டது, சொல்லி சொல்லி ஆகிய பாடல்கள் உள்ளன.
ராஜகுமாரன்
1994ல் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான படம். பிரபுஇ கனகாஇ கவுண்டமணிஇ மனோரமாஇ மலேசியா வாசுதேவன்இ செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவாவின் தெவிட்டாத இன்னிசையில்
ஒட்டுமொத்த தாய்க்குலங்களும் அந்த சிரிப்பினில் மயங்கி விடுவார்கள். கள்ளம் கபடமற்ற அந்த குழந்தைத்தனமான சிரிப்பு வேறு எந்த நடிகருக்கும் வாய்க்காது. இந்த அழகான சிரிப்பை சின்னத்தம்பி படத்தில் காணலாம். இனி 1990களில் இவரது நடிப்பில் சக்கை போடு போட்ட படங்களைக் காணலாம்.
1994ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் ஆர்.வி.உதயகுமார். பிரபு, மீனா, விஜயகுமார், நதியா. கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசை மனதை மயக்கி இருக்கையுடன் கட்டிப்போட்டது. ராஜகுமாரன், என்னவென்று சொல்வதம்மா உள்பட பல பாடல்கள் உள்ளன.
சின்ன மாப்ளே
சந்தானபாரதியின் இயக்கத்தில் 1993ல் வெளியான படம். பிரபுவுடன் இணைந்து விசு, ராதாரவி, சுகன்யா, ஆனந்த், வினுசக்கரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். வானம் வாழ்த்திட மேகம், வெண்ணிலவு கொதிப்பதென்ன, காட்டு குயி;ல் பாட்டு சொல்ல, காதோரம் லோலாக்கு, கண்மணிக்குள் சின்ன சின்ன, அட மாமா நீ ஆகிய பாடல்கள் உள்ளன.
ஜல்லிக்கட்டு காளை
1994ல் மணிவாசகம் இயக்கத்தில் வெளியான படம். பிரபு, கனகா, கவுண்டமணி, மனோரமா, மலேசியா வாசுதேவன், செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவாவின் தெவிட்டாத இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.
தூக்கணாங்குருவி, அன்னக்கிளி சேலை கட்டி, நிம்மதி என்ன விலை, சிறு மல்லிப்பூவே, நாடையா இது நடையா ஆகிய பாடல்கள் உள்ளன.