எல்லா பக்கமும் அடி.! நம்ம பழைய தொழிலுக்கே போயிடுவோம்.! அதிரடி முடிவில் PD.!
திரையுலகில் பிரபலமான நடன இயக்குனர் சுந்தரம் அவர்களின் மகனாக தமிழ் திரையுலகில் நடன கலைஞராக அறிமுகமாகி, அதன் பின்னர், தனது திறமையால் நடனத்தில் சிறந்து விளங்கி நடன இயக்குனராக வளர்ந்து நின்றார் பிரபு தேவா.
அதன் பின்னர் அவ்வப்போது பல படங்களில் நாயகனாக நடிக்கவும் தொடங்கினார். அந்த படங்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அதன் பின்னர் வெகு நாட்களுக்கு பிறகு போக்கிரி எனும் திரைப்படத்தின் மூலம் வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்தார்.
அதன் பின்னர் பாலிவுட்டில் சல்மான்கான், அக்ஷய் குமார் , அஜய் தேவ்கன் என முன்னணி ஹீரோக்களை இயக்கி முன்னணி இயக்குனரக வலம் வருகிறார் பிரபு தேவா. அவ்வப்போது நடிக்கவும் செய்து வருகிறார்.
இதையும் படியுங்களேன் - கொஞ்சம் பெரிய இடம்.! அங்கேயாவது கொஞ்சம் நடிங்க பாஸ்.! கெஞ்சும் ரசிகர்கள்.!
ஆனால், நடிப்பு, இயக்கம் என பிரபு தேவாவின் முகம் இறங்குமுகமாகவே இருக்கிறது. அதனால், தற்போது மீண்டும் நடனத்தின் பக்கம் திரும்பிவிட்டார் பிரபு தேவா.
மலையாளத்தில் மஞ்சு வாரியார் நடிக்கும் படத்திற்கு நடன இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதே போல, தமிழில் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் நடன இயக்குனராக களமிறங்கிவிட்ட்டார் பிரபுதேவா.
தற்போது மீண்டும் தனது முதற்படியான நடனத்தில் இருந்து தொடங்கி வருகிறார் பிரபு தேவா. மீண்டும் நடிப்பு, இயக்கம் என கொடிகட்டி பறக்க போகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.