நான் மட்டும் சினிமாவுக்கு வரலேன்னா...இப்போ எங்கேயாவது பியூனாயிருப்பேன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கல...!
நடனப்புயல் என்றாலே பிரபுதேவா என்று நமக்கு தெரியும். பழகுவதற்கு எளிமையானவர். பண்பானவர். சோம்பிக் கிடப்பவர்கள் இவரது நடனத்தைப் பார்த்தால் போதும். துள்ளி எழுந்து விடுவார்கள். நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முகத்திறன் கொண்ட இவரது நினைவலைகளை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.
கல்லூரி மாணவர்களுடன் நடந்த உரையாடலில் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்ட பிரபுதேவாவின் பதில்கள் இவை. உங்களுக்காக பதில்கள் மட்டும் கோர்வையாக்கப் பட்டுள்ளது.
இந்தில ஆடியன்ஸ் நல்லா ஏத்துக்கிட்டாங்க. ஏபிசிடி, ஒன் டூ நல்லா ஓடுச்சு. கோரியோகிராபர் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஸ்கூல் டேஸ்ல சரியா படிக்க மாட்டேன். ஆனா ஜாலியா இருந்துச்சு. முதல்ல ஆக்டிங்கே பண்ண வராது. ரௌடி பேபி பாட்டுக்கு எல்லாம் அமைஞ்சது. அதனால மெகா ஹிட்டானது.
எல்லா ஹீரோயின்ஸ்க்குமே ஆடுறதுக்கு இன்ட்ரஸ்ட் இருக்குது. ராதா, ராதிகா, அமலா எல்லாருமே சூப்பர். ரோஜா, மீனா, சிம்ரன், ரம்பா எல்லாருமே நல்லா ஆடுவாங்க. விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு எல்லாருமே நல்லா ஆடுவாங்க. விஜய் ரொம்ப அமைதியா எளிமையா இருப்பாரு. பஞ்சுவாலிட்டியைக் கடைபிடிப்பாரு. டைரக்டர் எதைச் சொல்றாரோ அதை கரெக்டா செய்வாரு. நான் அவருக்கிட்ட கத்துக்கிட்டேன்.
பிட்னஸ்க்கான காரணம் டான்ஸ்தான். இதுக்காகவே சாப்பாடு இதெல்லாம் ஸ்டிர்க்ட்டா இருப்பேன். எக்சர்சைஸ் பண்ணுவேன். ஜிம்முக்கு போக மாட்டேன். எல்லாமே வீட்லதான்.
நடிக்கணும்ங்கற ஆசை அப்பாவுக்கு இருந்தது. ஆக்சுவலா எனக்கு இஷ்டமே இல்ல. ஏன்னா டான்ஸ் போகும்போது 3 நாள் தான் இருப்போம். 2 சாங்கே நான் ஸ்ட்ரெய்ட்டா பண்ண மாட்டேன்.
லாஸ்ட்டா நான் பண்ணுன பாடல்கள் எல்லாம் சிக்கு புக்கு ரெயிலே, வால்டர் வெற்றி வேல் படத்துல சித்தெறும்பு, அடக் படக் எல்லாம் பெரிய ஹிட்டாயிடுச்சு. சோ ஜனங்களுக்கு ஒரு கிரேஸ் வந்துடுச்சு. இவரு ஆக்ட் பண்ணா எப்படி இருக்கும்னுட்டு என்னை ஹீரோவாக்கிட்டாங்க.
நான் கோரியாகிராபர் தான். டெக்னீஷியன் தான மெயினா. நான் தெரியாத்தனமா ஆக்டர் ஆயிட்டேன். எனக்கு டைரக்ட் பண்ணனும்னு ரொம்ப நாளா ஆசை இருந்துச்சு. எனக்கு டென்ஷன் பிடிக்கும். ரெஸ்பான்சிபிலிட்டி வருது. அவங்க டைரக்ட் பண்ணுவீங்களான்னு கேட்டதும் நான் ஓகேன்னுட்டேன். அந்த வகையில எனக்கு ரொம்ப பிடிச்சது. கிரியேட் பண்றது ரொம்ப பிடிக்கும்.
டான்ஸ் போய் ரீச் ஆனதால நார்த்லயும் என்னை பிடிச்சது. நான் தப்பு பண்ணாலும் அவங்க மறைச்சிடுவாங்க. பகிரா படத்துல பொண்ணு வேடம், மொட்டைத்தலை இரண்டுக்குமே முதல்ல சம்மதிக்கல. அப்புறம் டைரக்டர் சொன்னதால சரின்னு நடிச்சேன்.
வடிவேலுவோட பயங்கரமான ஃபேன் நான். அவரை எல்லாருக்குமே பிடிக்கும். அவருக்கூட பண்றதுக்கு என்ன...அவருகூட சும்மா பண்ணுங்கன்னு சொன்னாலும் பண்ணுவேன்...ஸ்கிரிப்டே இல்லன்னாலும் கூட. ரொம்ப பிடிக்கும் வடிவேல.
ஆக்ட் பண்ணும்போது என்ன பண்றோம்னு தெரியறத விட இப்போ என்ன பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன். டைரக்ட் பண்ணி ஆக்ட் பண்றது ரொம்ப கஷ்டம். சில பேரு பண்றாங்க. தே ஆர் கிரேட். நாம அவ்ளோலாம் இல்ல.
நல்ல வேளை நான் இங்கே (சினிமாவுக்கு) வந்துட்டேன். இல்லேன்னா எங்கேயாவது பியூனா இருந்துருப்பேன். முதல்ல என்னை நல்லா டேன்ஸ் ஆடுறேன்னு சொன்னது எங்க குரு தர்மராஜ் மாஸ்டர், லட்சுமணன் மாஸ்டர் சொல்வாங்க. எனக்கு வந்து அவங்க தெய்வம் மாதிரி. அவங்களுக்கு என்னன்னா ரொம்ப பிடிக்கும்.
ஏன்னா நான் நல்லா ஆடுவேன். ஒரு தடவை பாம்பே போய்க்கிட்டு இருந்தேன். 20 வருஷம் இருக்கும். அங்க ஒரு டிராபிக் சிக்னல்ல நின்னுக்கிட்டு இருந்தேன். அங்க ஒருத்தர் ஒரு கை, கால் இல்லாம பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தாரு.
என்னைப் பார்த்தவுடனே தட்டை எல்லாம் தூக்கிப்போட்டுட்டு ரொம்ப சந்தோஷமா சார்னு ஆட ஆரம்பிச்சிட்டாரு. அப்போ என் கூட என் ப்ரண்டும் இருந்தாரு. பாருங்க மாஸ்டர் இதை விட உங்களுக்கு என்ன வேணும்னு என் ப்ரண்ட் சொல்றான்.