கதை சொல்ல வந்த இயக்குனருக்கே ஆடிஷன் வச்ச பிரபுதேவா!..எந்த படம்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!..

by Rohini |
deva_main_cine
X

தமிழ் சினிமாவில் 90களில் முன்னனி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரபுதேவா. ஆரம்பத்தில் டான்ஸராக சினிமாவிற்குள் நுழைந்து படிப்படியாக நடிகராக மாறினார். இவரின் நடிப்பில் வெளிவந்த காதலன் திரைப்படம் இவரின் கெரியரையே புரட்டி போட்டு விட்டது.

deva1_cine

காதலன் படத்தின் வெற்றி இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. வரிசையாக படங்கள் வந்து விழுந்தன. நடித்த பெரும்பாலான படங்கள் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றன. கூடவே தன் நடனத்தையும் இவர் மறக்க வில்லை. டான்ஸ் மாஸ்டராகவும் தன் வேலையை கவனித்து வந்தார்.

இதையும் படிங்க : சினிமாவுல வளரனுமா அட்ஜெஸ்மென்ட்க்கு ஒத்துக்கோ!.. கீழ்த்தரமாக பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன்!..

deva2_cine

புது முக நடிகர்களின் வரவால் பிரபுதேவாவின் மார்க்கெட் சரிய தொடங்கியது. பின் இயக்குனர அவதாரம் எடுத்தார். விஜயை வைத்து போக்கிரி படத்தை இயக்கி பெரும் வெற்றி பெற்றார். ஹிந்தியிலும் ஒரு சில படங்களை இயக்கினார். இந்த நிலையில் இவரை தேடி ஏராளமான படங்கள் வந்திருக்கின்றது. ஒரு சில காரணங்களால் அதை தவிர்த்திருக்கிறார். ஆனால் இவர் நிராகரித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

deva3_cine

அந்த வகையில் இயக்குனர் பிரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படம் முதலில் பிரபுதேவா நடிக்க வேண்டியதாம். பிரதீப் பிரபுதேவாவிடம் கதையை சொல்லியிருக்கிறார். கதை கேட்ட அவர் ஒரு சில காட்சிகளை எடுத்து கொண்டு வா என பரீட்சை வைத்தாராம் பிரபுதேவா. ஆனால் ஒரு சில காரணங்களால் பிரபுதேவாவால் நடிக்காமல் போக ஜெயம் ரவி கமிட் ஆகியிருக்கிறார். படம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றது என அனைவரும் அறிந்த ஒன்று.

Next Story