பிரபுதேவா முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
திரைத்துறை மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் எடுத்த எடுப்பிலேயே யாரும் உயரத்திற்கு வந்து விட முடியாது. என்னதான் ஆள் பலம் இருந்தாலும் திறமையும் உழைப்பும் இருந்தால் மட்டுமே அந்த துறையில் நாம் சாதிக்க முடியும். அப்படி தனது திறமையால் திரைத்துறையில் சாதித்தவர் தான் நடிகை பிரபுதேவா.
டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என பல திறமைகளை தனக்குள் வைத்துள்ள பிரபு தேவா சமீபகாலமாகவே நடிப்பில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட இவரது நடிப்பில் உருவான பொன்மாணிக்க வேல் படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதுதவிர பஹீரா, தேள், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட படங்களும் வெளியீட்டிற்காக வெயிட்டிங்கில் உள்ளன. இன்னும் ஒரு சில புதிய படங்களிலும் பிரபு தேவா ஒப்பந்தமாகி மிகவும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட பிரபு தேவா பெண் மருத்துவர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நடிகர் பிரபு தேவா முதன் முதலில் தான் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார். அதன்படி பிரபு தேவா கூறியதாவது, "நான் முதன்முதலில் வாங்கிய சம்பளம் 500 ரூபாய் தான். அதை இயக்குனர் மணிரத்னம் அவரது கையால் எனக்கு கொடுத்தார்" என கூறியுள்ளார்.
எல்லாருக்குமே அவங்களோட முதல் சம்பளம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவம். முதன் முறையாக நம் சொந்த உழைப்பில் நாம் பெற்ற பணம் என்பதால் அது எப்போதும் நம் நினைவில் இருக்கும். அந்த வகையில் நடிகர் பிரபு தேவாவும் அவரது முதல் சம்பளம் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார் போலும்.