தமிழ் சினிமாவில் நடன புயலாக அறியப்படுபவர் நடிகர் பிரபுதேவா .தமிழ் சினிமா மட்டுமல்ல இன்று இந்திய சினிமாவே அறியப்படும் ஒரு பெரிய நடன இயக்குனராக மாறி இருக்கிறார். மைக்கேல் ஜாக்சனுக்கு பிறகு நடனத்தைப் பற்றி பலபேரும் அறியும் வகையில் அதை மிகவும் பிரபலப்படுத்தியவர்களில் முக்கிய பங்கு வகித்தவர் பிரபுதேவா .
இவர் சினிமாவிற்கு வந்த பிறகுதான் சினிமாவில் நடன உலகம் என்பது வேறு மாதிரியாக மாறியது. 90களில் நடனத்திற்கு உண்டான ஸ்டைலை முழுவதுமாக மாற்றி ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதில் புதைந்த நடன ஆர்வத்தை வெளிக்கொண்டு வந்தார் .ஆரம்பத்தில் நடன இயக்குனராக இருந்த பிரபுதேவா இந்து என்ற படத்தின் மூலமாகத்தான் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதையும் படிங்க: ரஜினியின் கூலி படத்தில் இணைந்த பிகில் பட நடிகை!.. அட இவங்களா?.. வெளியான அப்டேட்!..
அதனைத் தொடர்ந்து காதலன் ,மின்சார கனவு ஆகிய படங்கள் அவரை ஹீரோவாக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. 90களில் ஒரு முன்னணி நடிகராகவே வலம் வந்தார் பிரபுதேவா. இவருக்கு சமீபத்தில் தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் பிரபுதேவாவை பற்றிய ஒரு ஃபிளாஷ்பேக் தகவலை சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
ஒரு முன்னணி ஹீரோ நடித்த படத்திற்கு ஒரு பாடல் காட்சியை படமாக்கி கொண்டிருந்தாராம் பிரபுதேவா. பாடல் காட்சி எல்லாம் முடிந்து அந்த பாடலின் பிரிவியூவை படத்தின் தயாரிப்பாளர் பார்த்து இருக்கிறார். உடனே பிரபுதேவாவை அழைத்து ‘என்ன பாடல் எடுத்திருக்க? அதுவும் ஒரு பெரிய ஹீரோ நடிக்கும் இந்த படத்தில் இப்படியா பாடலை எடுப்பது?’ என வாய்க்கு வந்தபடி கேட்டாராம்.
இவர் இப்படி திட்டியதும் பிரபுதேவாவுக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் திகைத்துப் போய் நின்று இருக்கிறார். உடனே அந்த பாடல் பதிவான ரீலை கொடுத்து நீயே போய் பாரு என சொல்லி அனுப்பி இருக்கிறார் அந்த தயாரிப்பாளர். இந்த சம்பவம் நடந்து சில தினங்களில் படமும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. எந்த அளவு இந்த பாடலை அந்த தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை என்று சொன்னாரோ அதற்கு பல மடங்கு ரசிகர்கள் மத்தியில் அந்த பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதாம்.
இதையும் படிங்க: அபூர்வ ராகங்கள் ரஜினிக்கு மட்டுமில்லை.. கமலுக்கும் அதுதான் முதல் படம்!. என்னப்பா சொல்றீங்க!…
இதை சமீபத்திய ஒரு பேட்டியில் பிரபு தேவா கூறும் போது ‘இதை பற்றி நான் எங்குமே சொன்னது இல்லை. ஆனால் இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் நமக்கு எதிராக எவ்வளவு விமர்சனம் வந்தாலும் அதற்கு எதிர்மறை ஆற்றாமல் தன்னுடைய வேலை சரியாக போய்க் கொண்டிருக்கிறதா என்பதை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதற்கான சரியான வரவேற்பு அங்கீகாரம் ஒரு நாள் நம்மை தேடி வரும்’ என கூறியிருக்கிறார் பிரபுதேவா.
