’மை டியர் பூதம்’ படத்தில என்னை ஏமாத்திட்டாங்க...! மனவேதனையுடன் பேசிய பிரபுதேவா...
இந்திய சினிமாவின் ஐகானிக் என்று புகழப்படுபவர் நடிகர் பிரபுதேவா. இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன் என்றும்
செல்லமாக அழைக்கப்படுபவர். ஒரு பக்கம் டான்ஸ், ஒரு பக்கம் நடிப்பு , ஒரு பக்கம் இயக்குனர் என பல திறமைகளை உள்ளடக்கியவர்.
தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் இவரின் பெருமை பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது. ஏகப்பட்ட படங்களை இயக்கவும் செய்து வெற்றியும் கண்டுள்ளார். அதிகமாக பேசமாட்டார். ஆனால் செயலில் காட்டக் கூடியவர்.
இவரின் நடிப்பில் ஜூலை மாதம் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் படம் மைடியர் பூதம். இந்த படத்தில் பூதமாக நடித்துள்ளார். மேலும் படத்திற்காக உண்மையிலயே மொட்டையும் அடித்துக் கொண்டார். மேலும் படத்தில் ஒரு நீளமான வசனத்தை சிரிப்பில் இருந்து ஆரம்பித்து கடைசியில் அழுகையில் முடிவடைகிற மாதிரியான வசனத்தை சிங்கிள் டேக்கில் எடுக்க படக்குழு திட்டமிட பிரபுதேவா முதலில் யோசித்தாராம்.
கொஞ்சம் கொஞ்சமாக கட் பண்ணி எடுத்துக்கலாம் என பிரபுதேவா கூறினாராம். ஆனால் இயக்குனரோ ஒரே ஷார்ட்டில் தான் வேண்டும் என சொன்னாராம். பின் கமலின் தெனாலி படத்தில் கமலும் இந்த மாதிரி நீளமான வசனத்தை பேசியிருப்பார். அதை மனதில் வைத்துக் கொண்டு பேசிவிட்டாராம். படக்குழு மொத்தமும் கைத்தட்ட இவரும் சந்தோஷப்பட்டாராம். மறு நாள் இயக்குனரிடம் மறுபடியும் பிரபுதேவா அந்த ஷார்ட் பற்றி கேட்க அதில் பாதியை கட் பண்ணிட்டோம். படத்திற்கு தேவையானதை மட்டும் வைத்துள்ளோம் என்று சொன்னதும் வருத்தத்துடன் நமக்கு படம் தானே முக்கியம் என கூறி அமைதியாகிவிட்டார்.