இனிமேல் அந்தாளு பேர சொல்லிட்டு வந்தா உள்ளேயே விடாதீங்க.! கொந்தளிப்பில் கோடம்பாக்கம்.!
ஒரு காலத்தில் லாபம் தரும் நல்ல நடிக்கவும், சூப்பர் ஹிட் கமர்சியல் பட இயக்குனராகவும் அறியப்பட்டவர் பிரபு தேவா. அதிலும் தமிழில் மட்டுமல்லாமல், பாலிவுட் வரை சென்று அங்கும் வெற்றி கொடி நாட்டியவர் பிரபு தேவா.
பாலிவுட்டில் ,மட்டும் சல்மான் கான் எனும் உச்ச நட்சத்திரத்தை வைத்தே 3 படங்கள் இயக்கியுள்ளார் அக்ஷ்ய் குமாருக்கு ரவுடி ரத்தோர் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்தார் பிரபு தேவா. மேலும் நடித்தாலும் ஓரளவு லாபம் தரும் சிறிய பட்ஜெட்படங்களில் அவ்வப்போது நடித்தும் வந்தார் பிரபு தேவா.
இவரது நடிப்பில் தற்போது ஒரு டஜனுக்கும் மேலான படங்கள் கிடப்பில் இருக்கிறதாம். பைனான்ஸ் கிடைக்காமல் அடுத்தகட்ட நகர்வுக்கு நகராமல் இந்த படங்கள் இருக்கின்றவனாம். காரணம் இவர் நடிப்பில் வெளியான தேவி-2, லக்ஷ்மி, பொன் மாணிக்கவேல், தேள் ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தது தான் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன் - இந்த போட்டோல இருக்குறது தனுஷ்னு சொன்ன அவங்க அம்மா கூட நம்பமாட்டாங்க.! என்னய்யா இப்டி மாறிட்டிங்க.!
நடிகர் பிரபு தேவாவுக்கு தற்போது சுத்தமாக மார்க்கெட் இல்லை என்பதால், தற்போது அவரை வைத்து படமெடுக்க எந்த பைனான்சியரும் கடன் கொடுக்க தயாராக இல்லையாம். அதுவும், அவரது பெயரை சொல்லிக்கொண்டு போனால் சுத்தமாக கடன் தர முறுகிறார்களாம்.
இதன்காரணமாக இவரை வைத்து படம் எடுத்தவர்கள் அதனை ரிலீஸ் செய்ய முடியாமலும், மீதி பேர் மீதி படத்தை முடிக்க முடியாமல் திணறி வருகின்றனராம். நடிகர் பிரபு தேவா மீண்டும் தனது இயக்கத்திற்கு திரும்பி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தால் தான் அவரது மார்க்கெட் மீண்டும் உச்சம் பெரும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.