Categories: Cinema History Cinema News latest news

நானும் மனுஷன் தான் என்னைய விட்ரு.. கதறிய வடிவேலு.. முதுகில் ஏறிக்கொண்ட மெகா ஹிட் இயக்குனர்…

வைகைப்புயல் வடிவேலுவை மீண்டும் எப்போது திரையில் அதே கலகலப்புடன், சுறுசுறுப்புடன் பார்ப்போம் என்று வடிவேலு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களும் காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது அவர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த செய்தி பலரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

வடிவேலு உடன் சேர்த்து நடித்த பெரும்பாலான ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்த காமெடி மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. குறிப்பாக வடிவேலு – பிரபுதேவா காம்பினேஷன் மிகவும் பிரபலம்.

அண்மையில் ஒரு நேர்காணலில் பிரபு தேவா, வடிவேலு பற்றி ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார். வடிவேலுவை நான் சூட்டிங் சமயத்தில் அவ்வளவு தொந்தரவு செய்வேன்.

சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது, இடைவெளியில் திடீரென அவர் வாயை திறந்து தண்ணீர் ஊற்றி விடுவேன், ஏதோ ஏதோ செய்து கொண்டிருப்பேன், அவர் ஏப்பா நானும் மனுஷன் தான் ஏன் இப்படி தொந்தரவு பண்ற.? என கெஞ்சுவார். ஆனாலும் நான் விடமாட்டேன். இருந்தும் அவர் கோபித்து கொள்ள மாட்டார்.

இதையும் படியுங்களேன் –   என்னய்யா பெரிய ராக்கி பாய்.?! எங்க கேப்டன் அப்போவே என்ன செஞ்சிருக்காருனு பாருங்க…3

ஷூட்டிங் ரெடி என்றதும் என்னை அவர் முதுகில் தூக்கி செல்வார். ஷூட்டிங் ரெடி ஆகிவிட்டது, வா செல்லலாம் என்று கூட்டி போவார். அந்த அளவுக்கு நானும் அவரும் அவ்வளவு நெருக்கம். வடிவேலு ரசிகர்களின் முதல் பத்து பேரை எடுத்தால் அதில் ஒருவன் நான்தான் என்று வடிவேலு பற்றிய ஞாபகங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். மெகா ஹிட் இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா.

Published by
Manikandan