Categories: latest news

ஹிப் ஹாப் ஆதிக்கே டஃப் கொடுப்பாரு போல!.. சூப்பர் ஹீரோவான பிரபுதேவா.. அந்த மின்னலை விட மாட்றாங்களே!..

ஹாலிவுட்டில் வெளியான பேட்மேன் மற்றும் ஃபிளாஷ் படங்களை விட்டால் இந்தியாவில் சூப்பர் ஹீரோ படங்களே உருவாகாது என்கிற லெவலுக்குத்தான் இன்னமும் இருக்கிறது. மின்னல் முரளி என மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்து வெளியான படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால், அந்த படமே ஃபிளாஷ் எனும் ஹாலிவுட் கதாபாத்திரத்தின் காப்பி தான் என ட்ரோல் செய்யப்பட்டது.

அந்த படத்தை அப்படியே பட்டி டிங்கெரிங் செய்து தமிழில் ஹிப் ஹாப் ஆதி வீரன் எனும் படத்தில் நடித்து இருந்தார். வீரன் படம் மின்னல் முரளி காப்பி இல்லை என மலையாள இயக்குநர் பசில் ஜோசப்பை வைத்தே பேட்டிக் கொடுத்திருந்தனர்.

இதையும் படிங்க: ஹீரோவுக்கு ஷூ லேசை அவுத்துவிடும் வேஷம்!.. அசிங்கப்பட்ட சிவாஜி!.. அட அந்த படமா?!..

இந்நிலையில், தற்போது பிறந்தநாளை முன்னிட்டு பிரபுதேவா மாஸ்டர் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மின்மேன் எனும் தலைப்பில் மின்னல் வீரன் போலவே இருக்கும் அறிமுக டீசர் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தை இயக்குவது, யார் எல்லாம் நடிக்கப் போகின்றனர் என்பது குறித்தெல்லாம் இனிமேல் தான் தெரியவரும் என்றும் அறிவித்துள்ளார். இன்று காலை முதலே பிரபுதேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டர் ஒன்று வெளியானது.

இதையும் படிங்க: பாக்கவே கூச்சமா இருக்கு!.. முழு அழகையும் மூடாமல் காட்டும் பிரியாமணி!. வைரல் போட்டோஸ்!..

மேலும், அனுஷ்காவின் காத்தனார் படத்தில் பிரபுதேவா இணைந்துள்ள நிலையில், மாயாஜால மந்திரவாதி போல பீரியட் லுக்கில் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். மின்மேன் திரைப்படத்தில் எதிர்கால இந்தியா காட்டப்படுகிறது. மீசையில்லாத லுக்கில் கோட் விஜய் போலவே சிஜியில் கலக்குகிறார் பிரபுதேவா.

வெறும் பிறந்தநாள் அறிவிப்பாக இல்லாமல் மின்மேன் படம் பக்காவாக உருவாகி வெளியாக வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. விஜய்யுடன் கோட், அனுஷ்காவுடன் காத்தனார் என அடுத்தடுத்து பல படங்களில் பிசியாகி வருகிறார் பிரபுதேவா. சோலோவாகவும் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

Saranya M

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

2 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

3 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

8 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

10 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

11 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

12 hours ago