செம குட் ஃபீலிங்!.. அடுத்த காதல் எப்போது?.. பிரபுதேவா சொன்ன பதில் இதுதான்!..
நடனம் என்றாலே நம் மனதிற்கு தோன்றும் முதல் நபர் பிரபுதேவா. இவர் இந்தியத் திரைப்பட நடிகர் , நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார் . இவர் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப்படுகின்றார் . பிரபுதேவா இன்று வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடி தன் திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன இயக்குனருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார் .
பிரபுதேவா நடனத்தில் மற்றும் அல்ல இயக்குனராகவும் தன் திறமையை வெளிப்படுத்தினார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு ,மலையாளம் ஆகிய மொழிகளில் இயக்கியுள்ளார். சமீபத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தபோது தொகுப்பாளர் ‘எங்கேயும் காதல் படத்தை போல் வேறு எதும் காதல் படம் வருமா?’ என்று எதிர்பார்ப்புடன் கேட்டார் . எங்கேயும் காதல் , தமிழ் மொழியில் காதல் நகைச்சுவை திரைப்படமாக ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா மோத்வானி நடிக்க ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் பிரபுதேவா இயக்கிய படமாகும்.
இத்திரைப்படம் வெளியான சமயத்தில் பல கலவையான விமர்சனங்களுக்கு உள்ளானது. எனவே, பெரிய வெற்றியை பெறவில்லை. லண்டனில் வசிக்கும் இந்தியப் பெண் இந்தியாவில் இருந்து வரும் இந்திய இளைஞன் ஒருவரை காதலிப்பதாக கதை நகரும். அவரின் கேள்விக்கு பதில் சொன்ன பிரபுதேவா ‘இத்திரைப்படம் வெளியான போது மக்கள் மனதை ஈர்க்கவில்லை. ஆனால் இப்பொழுது எங்கேயும் காதல் திரைப்படம் போல் மீண்டும் படம் இயக்குவீர்களா என கேட்கிறார்கள். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜின் சிறப்பான இசையை கொடுத்திருந்தார். எதிர்காலத்தில் கண்டிப்பாக அது போல ஒரு படம் இயக்குவேன் என பிரபுதேவா கூறினார்.
இப்படத்திற்கு முதலில் பாரிஸ் எனப் பெயரிட்டாராம். அதன்பின் இது ஒரு காதல் சப்ஜெக்ட் படம் என்பதால் எங்கேயும் காதல் என பெயர் மாற்றப்பட்டது . இது மட்டும் அல்ல ஹன்சிகா தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு 158 பெண்கள் கதாநாயகிக்காக ஆடிஷன் செய்யப்பட்டன . இப்படத்தின் பாடல் " நெஞ்சில் நெஞ்சில்" என்ற படலின் வீடியோ கிரீஸில் உள்ள சாண்டோரினி தீவிலும் , " தீ இல்லை * என்ற பாடல் நியூசிலாந்திலும் பாடல் அமைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: டிரைலரை பாக்கும்போதே தூக்கம் வருதே… மணிரத்னத்தை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்…