நடன இயக்குனரான ஹரிகுமார் மற்றொரு நடன இயக்குனரான பிரபு தேவாவை வைத்து இயக்கியுள்ள படம் தான் தேள். ஸ்டியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தற்போது மிகப்பெரிய சிக்கலில் சிக்கியுள்ளது. இரண்டு நடன இயக்குனர்கள் இணைந்துள்ளதால் படம் நன்றாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் தற்போது தேள் படம் முழுக்க முழுக்க ஒரு கொரியன் படத்தை காப்பி அடித்து எடுக்கப்பட்ட படம் என கூறப்படுகிறது. ஆம் அதன்படி பியாதா என்ற கொரியன் படத்தின் கதையை தான் அப்படியே சுட்டு தேள் படத்தை இயக்குனர் ஹரிகுமார் எடுத்துள்ளாராம்.
படம் முழுவதும் முடிவடைந்த பின்னர் தான் கொரியன் படத்தின் தழுவல் என்பது தயாரிப்பாளருக்கு தெரியவந்துள்ளது. இதுதவிர இந்த கொரியன் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று முறைப்படி அனுமதி பெற்றிருந்தது. ஆனால் தேள் படக்குழுவினர் அதுபோன்ற அனுமதி எதையும் பெறவில்லை.
இந்த செய்தியை அறிந்த பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் தேள் படக்குழுவினரிடம் நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் வரை கேட்டுள்ளனர். இதனால் தேள் படத்தை கொரியன் படத்தின் சாயலில் இருந்து மாற்ற படக்குழுவினர் முயற்சி செய்துள்ளனர். ஆனால் படம் முழுமையாக எடுக்கப்பட்டிருந்ததால் அது சாத்தியம் இல்லாமல் போனது.
எனவே அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை நஷ்ட ஈடாக கொடுத்துள்ளனர். எப்படி பார்த்தாலும் படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தான் என்பதால் பிரபு தேவா அவரின் சம்பளத்தில் பெரும்பகுதியை விட்டு கொடுத்ததாக தெரிகிறது. கடைசில தேள் கைய கொட்டிடுச்சே….
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…
தமிழ் சினிமாவில்…