விஸ்வரூபமெடுத்த சொத்து பிரச்னை... கோர்ட் வரை சென்ற வழக்கு... சிவாஜிக்காக களமிறங்கும் கோலிவுட் சூப்பர்ஸ்டார்கள்...
ராம்குமார் மற்றும் பிரபு மீது அவர்கள் சகோதர்கள் சொத்துக்காக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், கோலிவுட் சூப்பர்ஸ்டார்கள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகராக இருந்த சிவாஜி கணேசன் 2001ம் ஆண்டு உயிரிழந்தார். அவருக்கு 270 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு நேரடி வாரிசுகளான ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்வி ஆகியோர் சொத்துக்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் சகோதரர்கள் அப்பாவின் சொத்துக்களை ஏமாற்றி விட்டதாக கோர்ட் படியேறினர். அந்த புகாரில், அப்பா உயில் எதுவுமே எழுதவில்லை. இவர்களே பொய்யாக ஒரு உயிலை ஏற்பாடு செய்து விட்டனர். பல சொத்துக்களை எங்களுக்கு தெரியாமல் விற்றும், அவர்களின் மகன்கள் மீது மாற்றியும் விட்டனர்.
இதையும் படிங்க: படப்பிடிப்பு தளத்திலே பிரபுவினை புரட்டி எடுத்த சிவாஜி… வலி தாங்க முடியாமல் கதறிய பிரபு…
தந்தையிடம் இருந்த 10 கோடி மதிப்புடைய 1000 சவரன் மதிப்புடைய தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றில் எங்களுக்கு கொஞ்சமும் தரவில்லை. அம்மா வழி சொத்துக்களை கூட தராமல் ஏமாற்றுகின்றனர் எனக் குறிப்பிட்டு இருந்தனர்.
பெரிய வீட்டின் இந்த தகராறு கோலிவுட்டிலே பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ரஜினி மற்றும் கமல் இதை உங்களுக்குள்ளாகவே பேசிக் கொள்ளுங்கள் என பிரபுவிடம் அறிவுறுத்தி இருக்கிறார்களாம். மேலும், விரைவில் சொந்த வீட்டில் இந்த பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும், கமல் இதை முன்னின்று நடத்தி சமாதானம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.