பிரபுவின் காதலால் சிவாஜி வீட்டில் நடந்த கலவரம்?.. அடிதடியில் இறங்கிய நடிகர் திலகம்?.. இப்படி ஒரு சம்பவமா?

by Rohini |   ( Updated:2023-04-10 02:50:33  )
prabhu
X

prabhu

தமிழ் சினிமாவில் இளைய திலகம் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் பிரபு. ஒரு பெரிய நடிகரின் வாரிசு என்பதையும் தாண்டி அனைவரிடமும் அன்போடும் அக்கறையோடு பழக்கூடியவர். அனைத்து பிரபலங்களும் பிடித்தமான நடிகராக வலம் வந்தார் பிரபு.

சிவாஜியின் வீட்டில் ஒரு எம்ஜிஆர்

சிவாஜியின் வீட்டில் ஒரு எம்ஜிஆர் என்றே பிரபுவை வர்ணித்தார்களாம். அந்த அளவுக்கு எம்ஜிஆரிடம் இருக்கும் கொடைத்தன்மை பிரபுவிடம் இருந்ததனால் இப்படி அழைத்திருக்கிறார்கள். படப்பிடிப்பில் தன்னை சந்திக்க வரும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் தன் வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்து வர சொல்லி சாப்பிட வைப்பாராம் பிரபு.

அதே நேரம் எந்த நடிகரிடமும் இதுவரைக்கும் ஈகோ பாராட்டதவராக இருந்திருக்கிறார். தனக்கு வரும் பட வாய்ப்புகள் தனக்கு செட் ஆகவில்லை என்றால் இவரே வேறொரு நடிகருக்கு பரிந்துரை செய்வாராம். அதே நேரம் ஒரே சமயத்தில் வெவ்வேறு நடிகர்களின் படப்பிடிப்பு நடக்கும் போது பேட்டி எடுக்க வரும் பத்திரிக்கை நண்பரிகளிடம் அந்த நடிகர்களின் படப்பிடிப்புகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. பேட்டி வேண்டுமென்றால் போய் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சிபாரிசும் செய்வாராம்.

கிசுகிசு

இப்படி ஒரு உன்னதமான நடிகராக வலம் வந்திருக்கிறார் பிரபு. 80, 90களில் கொடி கட்டி பறந்த சமயத்தில் ஒரு நடிகையுடன் பிரபுவை கிசுகிசுத்து பல பத்திரிக்கையில் எழுதப்பட்டது. ஆனால் அதற்கு பிரபுவும் சரி அந்த நடிகையும் சரி எந்த விதத்திலும் மறுப்பு சொல்லவில்லை.

இந்த தகவலை கூறிய மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலுவிடம் தொகுப்பாளினி ‘பிரபுவின் காதல் தெரிந்து சிவாஜி மதம் காட்டி அதை ஏற்க மறுத்தாரா?’ என்று கேட்டார். அதற்கு பதிலளித்த செய்யாறு பாலு ‘அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக பத்திரிக்கையில் வெளிவந்தது. ஆனால் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, மேலும் இந்த விஷயம் சிவாஜி வரைக்கும் மீடியா வரைக்கும் தெரிந்த பிறகு பிரபுவும் அந்த நடிகையும் சேர்ந்து நடிப்பதை குறைத்துக் கொண்டார்கள்’ என்று கூறினார்.

மேலும் அந்த நடிகையும் வேறொரு பேட்டியில் ‘என் ஆஸ்தான ஹீரோ கார்த்திக் தான் , அவரைத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு ஒரு இயக்குனரை திருமணம் செய்து கொண்டார் என்று செய்யாறு பாலு கூறினார். பிரபுவின் காதலால் ஒரு பக்கம் களேபரம் நடந்திருந்தாலும் சினிமாவில் தனக்கு எப்படி பட்ட ஒரு மரியாதை இருக்கிறது, அதை தன் மகன் எப்படி காப்பாற்றுவான் என்பதில் மிகவும் கவனமாக இருந்தாராம் சிவாஜி.

அடிதடியில் சிவாஜி

பிரபு முதலில் தமிழ் உச்சரிப்பில் சொதப்புவாராம். அதை சிவாஜி மிகவும் கண்டிப்பாராம். இதைப் பற்றி ஒரு பேட்டியில் பிரபு கூறும் போது கூட சில சமயங்களில் நடிப்பில் தவறு செய்தால் அப்பா அடிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க : சச்சினுடன் விளம்பரத்தில் நடிக்க மறுத்த சின்னத்திரை பிரபலம்!.. பின்ன அப்படி நடிக்க சொன்னா நடிப்பீங்களா என்ன?..

Next Story