கமலுடன் நடிக்க கூடாது.. தந்தைக்கு முட்டுக்கட்டை போட்ட பிரபு...

by Akhilan |   ( Updated:2022-09-29 00:17:50  )
கமலுடன் நடிக்க கூடாது.. தந்தைக்கு முட்டுக்கட்டை போட்ட பிரபு...
X

தமிழ் சினிமாவின் முக்கிய படமான தேவர் மகனில் நடிக்க முதலில் சிவாஜி கணேசன் மறுத்துவிட்டாராம். இருந்தும் கமலின் பிடிவாதத்தால் மட்டுமே அந்த படத்தில் அவர் நடித்தார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட சமுகத்தினை குறித்து எடுக்கப்படும் தேவர் மகன். இப்படத்தில் நாயகனாக கமல் நடித்திருப்பார். இப்படத்தினை பரதன் இயக்கி இருந்தார். இருந்தும் இப்படத்தின் திரைக்கதைக்காக படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் சங்கிலி முருகன். அவரின் படங்களான எங்க ஊர் பாட்டுக்காரன், எங்க ஊர் காவல்காரன் உள்ளிட்ட படங்களை எடுத்திருக்கிறார். அத்தனையும் கிராமத்து கதை. இதனால் தேவர் மகன் படத்தில் கிராம களத்தினை எளிதாக கொண்டு வர இவர் உதவுவார் என்பது கமலின் முடிவு.

தொடர்ந்து, தேவர் கதாபாத்திரத்தை சிவாஜி கணேசன் தான் நடிக்க வேண்டும் என்பதில் கமல் பிடிவாதமாக இருந்திருக்கிறார். அப்போது தான் படத்திற்கு கூடுதல் பலம் கிடைக்கும் என நினைத்தார். இதை தொடர்ந்து, கதையை சிவாஜியிடம் கூறினாராம் கமல். அவரும் பொறுமையாக கேட்டார். எல்லாம் சரிப்பா, ஆனால் என் மகன்கள் நடிக்க வேண்டாம். வீட்டில் ஓய்வெடுங்கள் எனக் கூறிவிட்டனர். பிரபு மற்றும் ராம்குமாருக்கு நான் மீண்டும் நடிப்பதில் விருப்பமில்லை எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரே ஆண்டில் 5 வெள்ளி விழாப் படங்களைத் தந்த உலகநாயகன் கமல்…! குவிந்தது ரசிகர் வட்டாரம்…!!!

எனக்கும் உடல்நிலை சரியாக இல்லை. பேஸ்மேக்கர் வைத்திருக்கிறேன். தற்போது அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு செல்ல இருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தை வேறு யாரையும் வைத்து பண்ணிக்கொள் என கமலிடம் சிவாஜி கூறிவிட்டாராம்.

ஆனால், கமலோ இந்த கதாபாத்திரம் எழுதப்பட்ட போதே உங்களை வைத்து தான் எழுதினோம். இதில் நீங்கள் தான் நடிக்கணும். உங்கள் சிகிச்சை எவ்வளவு நாள் எனக் கேட்டார். 2ல் இருந்து 3 மாசம் ஆகும் என்றாராம் சிவாஜி. சரி நீங்கள் சென்று வாருங்கள் நான் வெயிட் செய்கிறேன். இல்லை இந்த படத்தினை கைவிடவேண்டி தான் எனத் தெரிவித்தார் கமல்.

தொடர்ந்து, சிவாஜி அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு கிளம்பிவிட்டாராம். 3 மாசம் கழித்து அவர் இந்தியா திரும்பினார். பின்னரே, அவர் நடிக்க இருந்த காட்சிகள் படமாக்கப்பட்டது. கமலின் பிடிவாதமாக இருந்ததற்கு சாட்சியாக படம் பாக்ஸ் ஆபிஸில் பக்கா வசூல் செய்தது. அதுமட்டுமல்லாது, சிவாஜிக்கு தேசிய விருதும் தேவர் மகன் படத்துக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story