Prabhudeva: விவாகரத்துக்கு பிறகும் அது தொடருது.. பிரபுதேவா முன்னாள் மனைவி கொடுத்த ஷாக்

deva
Prabhudeva: தென்னிந்தியாவின் மைக்கேல் ஜாக்ஷன் என்று அழைக்கப்படுபவர் நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா. ஆரம்பத்தில் குரூப் டான்ஸராக இருந்து பின் டான்ஸ் மாஸ்டராக மாறினார். முதன் முதலில் இந்து என்ற படத்தில்தான் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரோஜா நடித்திருப்பார். இந்து படத்தை பொறுத்தவரைக்கும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.
இந்த நேரத்தில்தான் பிரபுதேவாவுக்கும் அவருடைய முன்னாள் மனைவியான ரம்லத்துக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. ரம்லத்தும் ஒரு டான்ஸர்தான். இருவரும் காதலித்து பின் திருமண வாழ்க்கையில் இணைந்தார்கள். இவர்களுடைய திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இவர்களுக்கு ரிஷி ராகவேந்தர் தேவா மற்றும் ஆதித் தேவா என இரு மகன்கள் உள்ளனர்.
இடையில் பிரபுதேவா பற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. நயன் தாராவுடனான பழக்கம், அவரைத்தான் திருமணம் பண்ண போகிறார் என்றெல்லாம் பல செய்திகள் வெளியானது. அப்போதுதான் பிரபுதேவாவும் அவருடைய முன்னாள் மனைவியான ரம்லத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இப்போது இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுடைய இரு மகன்களும் அம்மாவிடம்தான் தான் இருக்கிறார்கள். பிரபுதேவா விவாகரத்துக்கு பிறகு மற்றொரு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் ஒரு மகள் பிறந்தார். சமீபத்தில் பிரபுதேவா நடன நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது பிரபுதேவாவும் அவருடைய மகன் ரிஷி ராகவேந்தர் தேவாவும் இணைந்து நடனம் ஆடினார்கள்.

இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த உறவை பற்றி பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரம்லத் ஒரு பேட்டியில் கூறும் போது விவாகரத்துக்கு பிறகு நானும் பிரபுதேவாவும் நண்பர்களாகத்தான் இருந்து வருகிறோம். ஆனால் பசங்க விஷயத்தில் இன்னும் நானும் பிரபுதேவாவும் பேசி முடிவெடுத்த பிறகுதான் அதை செயல்படுத்துவோம். அதே போல் பசங்களும் பிரபுதேவாவிடம் கேட்காமல் எதையும் செய்ய மாட்டார்கள்.
பிரபுதேவா சென்னைக்கு வரும் போதெல்லாம் பசங்க அவரை போய் பார்த்துவிடுவார்கள். திரும்பவும் பிரபுதேவாவே பசங்களை இங்கு வந்து டிராப் செய்துவிட்டுத்தான் போவார். நானும் இன்னும் பிரபுதேவாவுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். பசங்களுக்காக எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு இருந்து வருகிறது என ரம்லத் கூறினார்.