இதெல்லாம் ஒரு பிரச்சினையா?.. ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க இருந்த வாய்ப்பை தவறவிட்ட பிரபுதேவா!..
தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஒரு முன்னனி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் பிரபுதேவா. இந்தியாவின் மைக்கேல் ஜான்சன் என அனைவராலும அழைக்கப்படுபவர். இசைப்புயல் ஏஆர்.ரகுமான் என்றால் நடனப் புயலாக பிரபுதேவா இந்தியா முழுவதும் வலம் வருகிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் அனைத்து மொழி சினிமாக்களிலும் பிரபுதேவாவின் ஈடுபாடு அதிகமாகவே இருக்கின்றது. குறிப்பாக பாலிவுட்டில் ஒரு தேடப்படும் மாஸ்டராக இருக்கிறார் பிரபுதேவா. நடிப்பு நடனம் இவை தவிர்த்து படம் இயக்குவதிலும் சாதனை படைத்திருக்கிறார்.
விஜயின் நடிப்பில் வெளியான போக்கிரி படம் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான படம் தான். அந்தப் படம் விஜய்க்கு ஒரு மாபெரும் வெற்றியை பதிவு செய்த படம். அதனை அடுத்து பாலிவுட்டிலும் ஒரு சில படங்களை இயக்கியிருக்கிறார்.
ஆரம்பகாலங்களில் பிரபுதேவா ஒரு ரோமியோ அளவில் ரசிகர்களிடையே வலம் வந்தார். அந்த அளவுக்கு அவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக காதலன், விஐபி, மிஸ்டர் ரோமியோ போன்ற படங்கள் பிரபுதேவாவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்த படங்களாகும்.
இந்த நிலையில் சசி என்ற இயக்குனர் சொல்லாமலே கதையை கலைப்புலி தாணுவிடம் சொல்லியிருக்கிறார். தாணுவிற்கும் பிடித்துப் போக அப்படியே பிரபுதேவாவிடம் சொல்ல அவருக்கும் பிடித்துவிட்டது. முதலில் அந்த கதை ‘கவிதை’ என்ற தலைப்பில் தயாராக இருந்தது.
எல்லா வேலைகளும் ஆரம்பித்து சசி படத்திற்கான டைட்டில் டிசைனை அடித்து தாணுவிடம் காட்டியிருக்கிறார். அதில் சசி யின் கவிதை தாணுவின் தயாரிப்பில் என போட்டப்பட்டிருந்ததாம். அதை பார்த்து தாணு எதுவும் சொல்லாமல் பிரபுதேவாவிடம் காட்ட சொல்லியிருக்கிறார்.
பிரபுதேவா அந்த டிசைனை பார்த்து செம காண்டாகி விட்டாராம். உடனே தாணுவிடம் ‘ நேத்து வந்தவன் அவன் பெயரை முதலில் போட்டு உங்கள் பெயரை கீழே போட்டிருக்கிறான், நாளைக்கு வளர்ந்துட்டானா என்னெல்லாம் செய்வான்’ என்று என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது, வேற ஹீரோவ பார்த்துக்கோங்க என சொன்னாராம்.
தாணு சசியிடம் எப்படியாவது பிரபுதேவாவை சமாதானப்படுத்து என சொல்ல பிரபுதேவா முடியாது என சொல்லிவிட்டாராம். உடனே சசி ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் அந்தக் கதையை அப்படியே சொல்லாமலே என்ற தலைப்பில் தயாராகியிருக்கிறது. அந்தப் படத்தில் ஹீரோயினாக கௌசல்யா நடித்தார். ஆனால் பிரபுதேவா ஒரு வேளை பிரச்சினை செய்யாமல் இருந்திருந்தால் கௌசல்யாவிற்கு பதிலாக ஐஸ்வர்யா ராய் தான் பிரபுதேவாவிற்கு ஜோடியாகியிருப்பாராம். வந்த வாய்ப்பை தவறவிட்டார் பிரபுதேவா. இந்த சுவாரஸ்ய தகவலை தாணு ஒரு பேட்டியின் போது கூறினார்.
இதையும் படிங்க : பாடுறது மட்டும்தான் உன் வேலை!.. பாடகியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இளையராஜா…