வில்லன் வேஷமுனா சும்மாவா? கோட் படத்தில் பிரபுதேவா சம்பளம் இத்தனை கோடியா?
Goat: கோட் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் மற்றும் இயக்குனரான பிரபுதேவாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் குறித்த முக்கிய தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.
கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்த திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். பாடல்கள் ரிலீஸுக்கு பின்னர் நல்ல ரீச்சை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி வேணாம்… இந்த வைரலயே ஹிட்டடிச்சிரலாம்… ஜெயம்ரவியின் பிரதர் ரிலீஸ் தேதி இதானாம்!
இப்படத்தில் வில்லனாக மைக் மோகன் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒரு நெகட்டிவ் ஷேடில் பிரபுதேவாவும் நடித்துள்ளார். இப்படத்தை உருவாக்கும் போது 90ஸ்களில் முன்னணியில் இருந்த பிரபல நடிகர்கள் நடித்தால் அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்பதே வெங்கட் பிரபுவின் எண்ணமாக இருந்ததாம்.
அதைத் தொடர்ந்து விஜயுடன் பிரபுதேவா மற்றும் பிரசாந்த் இணைந்துள்ளனர். அவர்களுக்கும் விஜயை போலவே முக்கியமான வேடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் நடிகர் பிரபுதேவாவிற்கு இரண்டு கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
இதையும் படிங்க: மாநாட்டிற்கு வந்த சிக்கல்! எப்படிப் போனாலும் முட்டுதே.. சிக்கலில் விஜய்
வில்லனாக நடித்த மைக்மோகனுக்கு 40 லட்சமும், ஒற்றைப் பாடலுக்கு நடனமாடிய திரிஷாவிற்கு 5 கோடியும், டாப் ஸ்டார் பிரசாந்துக்கு 5 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இப்படத்தில் விஜய் இருக்க சம்பளமாக 200 கோடி வரை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான இப்படம் 400 கோடி அளவில் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆறாம் நாள் முடிவில் இப்படம் 330 கோடியை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கிறது. விரைவில் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.