பிரபுதேவா மீது இருந்த காதலால் நான் அதையே நிறுத்தினேன்! – பலவருட ரகசியத்தை சொன்ன வனிதா!..

Published on: July 23, 2023
prabhudeva vanitha
---Advertisement---

அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகை வனிதா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் பிரபுதேவாவை மிக தீவிரமாக, வெறித்தனமாக காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார். நடிகை வனிதா 2 முறை திருமணமாகி, பிறகு விவாகரத்து செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்தார். அந்த நேரத்தில் நடன இயக்குநர் ராபர்ட் என்பவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள போவதாகவும் அறிவித்தார்.

kadhalan

பின்னர் அவர்கள் பிரிந்து விட்டனர். பல ஆண்டுகள் கழித்து பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்த வனிதா, கிருஸ்தவ முறைப்படி எளிமையாக அவரை திருமணம் செய்துகொண்டார். சில நாட்களிளேயே கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்துவிட்டனர். பல ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் வனிதா.

இந்நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் சிறு வயதில் பிரபுதேவாவை தான் வெறித்தனமாக காதலித்ததாகவும், காதலன் படம் வந்த சமயத்தில் அவரின் புகைப்படங்கள், செய்திகள் எல்லாவற்றையும் சேகரித்து வந்தேன் என்றும் தெரிவித்துள்ளார். நக்மாவாக தன்னை நினைத்துக்கொண்டு, கனவில் பிரபுதேவாவுடன் டூயட் ஆடியுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

prabhudeva

பிரபுதேவா மீது வனிதா வெறித்தனமாக அன்பு வைத்திருப்பதை அறிந்த அவரின் தந்தை விஜயகுமார், பிரபுதேவைவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, வனிதா விதவிதமாக பல அசைவ உணவுகளை சமைத்து வைத்துள்ளார். வீட்டிற்கு வந்த பிரபுதேவா, நான் வெஜிடேரியன், முட்டை மட்டும் தான் சாப்பிடுவேன் என்று கூறி ஷாக் கொடுத்துவிட்டார்.

vaniitha

உடனே ஓடி போய் முட்டையை வைத்து சமைத்து கொடுத்ததாகவும், அதன் பிறகு சில நாட்கள் பிரபுதேவாவிற்காக நானும் வெஜிடேரியனாக மாறிவிட்டேன் என்றும் வனிதா தெரிவித்துள்ளார். சிறிது காலம் நான் பிரபுதேவா மீது இருந்த காதலுக்காக வெஜிடேரியனாக இருந்தேன். அதன் பிறகு மீண்டும் அசைவம் சாப்பிட தொடங்கிவிட்டேன் என வனிதா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- சித்தர்களை பார்த்து முழுவதுமாக மாறிவிட்ட சிம்பு – சந்தானம் சொன்ன அதிர்ச்சி தகவல்!..

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.