ரஜினியை போய் நானா?..அப்புறம் நான் வெளிய போக முடியாது!....நடிக்க மறுத்த பிரபு....

by சிவா |   ( Updated:2022-02-23 07:38:00  )
prabu
X

பாபா உள்ளிட்ட சில தோல்விப்படங்களை கொடுத்த ரஜினி பி.வாசு இயக்கத்தில் நடித்து மாபெரும் வெற்றிப்படமான சந்திரமுகி படத்தை கொடுத்தார். இப்படம் 100 நாட்களுக்கும் மேல் ஓடி வசூலை வாரி குவித்தது.

இப்படத்தில் ரஜினியை நாசர் கன்னத்தில் அறைந்து வீட்டை விட்டு வெளியேற்றும் ஒரு காட்சியை பி.வாசு எடுத்திருப்பார். முதலில் நாசருக்கு பதில் ரஜினியை பிரபு அடித்து வெளியேற்றுவது போலத்தான் அந்த காட்சியை பி.வாசு எடுக்க திட்டமிட்டிருந்தார்.

chandra

திடீரென இந்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என பிரபு கூறிவிட்டார். ‘இதுதான் காட்சி என நேற்று கூறினேன்.. இது நடிப்புதான்யா பண்ணு’ என வாசு கூற ‘சூப்பர்ஸ்டாரை அடித்துவிட்டு நான் வெளிய போக முடியுமா? நான் நடிக்க மாட்டேன்’ என திட்டவட்டமாக மறுத்துவிட்டார் பிரபு.

nasar

எனவே, விஜயகுமாரை அந்த காட்சியில் நடிக்குமாறு வாசு கூற, அவரும் அதே காரணத்தை கூறி நடிக்க மறுத்தார். ஆனால், நாசர் அந்த காட்சியில் நடிக்க முன்வந்தார்.

இதை நாசர் ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story