இது வந்தா மட்டும் தான் திருமணம் செய்துக்கொள்வேன்… பிரதீப் ஆண்டனி என்ன ஓபனா சொல்றாரு?
Pradeep antony: பிக் பாஸ் தமிழ் ஏழாவது சீசனில் கலந்துகொண்டு புகழ்பெற்றவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இவர் தன்னுடைய திருமணம் குறித்து பேசி இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் கவின் நண்பராக அவரைக் காண குடும்ப வாரத்தில் உள்ளே வந்தவர் பிரதீப் ஆண்டனி. அதற்கு முன்னர் அவர் பல படங்களில் நடித்திருந்தால் கூட அன்றைய நாளில் அவர் கவின் உடன் நடந்து கொண்டது அவருக்கு ரசிகர்களை குவித்தது. நிகழ்ச்சியில் வைத்தே கவிதை அறைந்தது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
இதையும் படிங்க: கொடிதான் பிரச்னைனு பாத்தா… இப்போ கட்சி பாடல் கூட இந்த பாட்டின் காப்பிதானா?
இந்த அறிமுகத்துடன் தான் பிக் பாஸ் சீசன் 7ல் பிரதீப் ஆண்டனி உள்ளே வந்தார். வந்த சில வாரங்களிலேயே அவருக்கு ஆதரவு அதிகரித்தது. கிட்டத்தட்ட பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்ற அடையாளத்துடன் வலம் வரப்பட்டார். ஆனால் கடந்த வருடம் இருந்த உரிமைக் குரல் இவருக்கு பிரச்சினையை உருவாக்கியது.
வீட்டில் இருந்த எல்லா போட்டியாளர்களும் பிரதீப் ஆண்டனிக்கு எதிராக குரல் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் அவர்களின் முடிவை பொருத்து கமல்ஹாசன் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்த வெளியேற்றினார். இது ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. பிரச்சினையும் விஸ்வரூபம் எடுத்தது.
இதையும் படிங்க: இப்படி போர் அடிச்சிருக்க கூடாது… கொட்டுக்காளி படத்தில் சூரி மட்டும்தான்… ட்விட்டர் விமர்சனம்
அதற்கு பதில் அளித்தவர், என்னுடைய காதலியை நான் கண்டிப்பாக பணம் சம்பாதித்த பின்னர்தான் திருமணம் செய்து கொள்வேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன். தற்போது சின்ன சின்ன ஈவண்டுகள் மட்டுமே செய்து வருகிறேன். பணம் சேர்ந்தவுடன் எங்களுடைய திருமணம் நல்லபடியாக நடக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.